செய்திகள் :

Saif Ali Khan: நீதிமன்ற உத்தரவால் சிக்கல்; ரூ.15,000 கோடி சொத்தை இழக்கும் சைஃப் அலிகான் குடும்பம்?

post image

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மத்திய பிரதேசத்தில் ராஜகுடும்பத்தை சேர்ந்தவர். போபால் நவாப்பான பட்டோடி குடும்பத்தை சேர்ந்த சைஃப் அலிகானுக்கு போபாலில் பூர்வீக சொத்து இருக்கிறது. அரண்மனை, நிலம், கட்டடங்கள் என 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு போபாலில் சொத்து இருக்கிறது. சைஃப் அலிகான் தனது குழந்தை பருவத்தில் போபாலில் இருக்கும் அரண்மனையில்தான் அதிகமான நாட்களை கழித்தார். போபாலின் கடைசி நவாப்பாக கருதப்படும் ஹமிதுல்லா கான் மகள் சஜிதா சுல்தான் கிரிக்கெட் வீரர் இப்திகர் அலிகானை திருமணம் செய்தார். ஹமிதுல்லாவிற்கு மூன்று மகள்கள் இருந்தனர்.

ஹமிதுல்லா இறந்த பிறகு அவரது மூத்த மகள் அபிதா சுல்தான் போபாலில் உள்ள சொத்துகளுக்கு வாரிசாக கருதப்பட்டார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து 1950ம் ஆண்டு தனது மகனோடு அபிதா சுல்தான் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார். அதோடு இந்திய குடியுரிமையையும் விட்டுவிட்டார். இதையடுத்து அவரது இரண்டாவது சகோதரி சஜிதா சுல்தான் சொத்துகளுக்கு வாரிசாக அறிவிக்கப்பட்டார்.

போபாலில் உள்ள சைஃப் அலிகான் சொத்து

ஆனால் 2014ம் ஆண்டு மத்திய அரசு திடீரென பட்டோடி குடும்பத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துகளும் எதிரி சொத்தாகும் என்று அறிவித்து நோட்டீஸ் அனுப்பியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துகள் இந்தியாவில் இருந்தால் அவை எதிரியின் சொத்துகளாக கருதப்படும். அந்த பிரிவின் கீழ் சஜிதா சுல்தான் சொத்துகளை மத்திய அரசு கொண்டு வர நினைத்தது. அப்படி எதிரி சொத்துகள் என்று அறிவிக்கப்பட்டுவிட்டால் அந்த சொத்து மத்திய அரசுக்கு சொந்தமாகிவிடும்.

இதையடுத்து மத்திய அரசின் நோட்டீஸை எதிர்த்து சைஃப் அலிகான் 2015ம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய அரசின் நோட்டீஸிற்கு தடை விதித்தது. சஜிதா சுல்தான் மகன் தான் மன்சூர் அலிகான் ஆவார். மன்சூர் அலிகானின் மகன் தான் நடிகர் சைஃப் அலிகான் ஆவார். அந்த வகையில் போபாலில் உள்ள நவாப் சொத்துகளுக்கு சைஃப் அலிகான் வாரிசாகும். அடிக்கடி சைஃப் அலிகான் போபால் சென்று வந்தார்.

திருமணமான பிறகு நடிகை கரீனா கபூருடன் சைஃப் அலிகான் போபால் வந்து சென்றார். இந்நிலையில் 2016ம் ஆண்டு மத்திய அரசு மேலும் ஒரு புதிய அரசாணையை பிறப்பித்தது. அதில் போபாலில் உள்ள நவாப் சொத்துகள் மீது வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சைஃப் அலிகான் சொத்துகள் அவரது கையை விட்டு போகும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் சைஃப் அலிகான் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பிறப்பித்திருந்த தடையையும் நீக்கிவிட்டது. மேலும் இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களுக்கு சம்பந்தப்பட்ட தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று கோர்ட் அறிவித்தது.

ஆனால் தற்போது கோர்ட் சொன்ன 30 நாட்கள் முடிந்துவிட்டது. ஆனால் சைஃப் அலிகான் இதுவரை சொத்துகளுக்கு உரிமை கோரி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. இதனால் எந்நேரமும் போபால் மாவட்ட நிர்வாகம் சைஃப் அலிகானின் குடும்ப பூர்வீக சொத்துகளை கையகப்படுத்தும் அபாயம் இருக்கிறது. இதனால் போபாலில் உள்ள அரண்மனை, நிலம், கட்டடம் என 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் அனைத்தும் மத்திய அரசு வசம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

`என்னை எப்படி இடிக்கலாம்?'- ம.பி-யில் தன்னை இடித்து தள்ளிய காரை பழிவாங்கிய நாய்.. வைரலாகும் வீடியோ!

மத்திய பிரதேச மாநிலம், சாகர் என்ற இடத்தில் பிரஹலாடு சிங் கோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணத்திற்காக தனது காரில் புறப்பட்டார். கார் கிளம்பி 500 மீட்டர் தூரத்தில் ... மேலும் பார்க்க

`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கப் பிரிவு மற்றும் சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளூர் போலீஸார் எதாவது வழக்குகளை பதிவு செய்திருந்தால் அதன் அடிப்படையில் தாங்களும் விசாரிப்பதுண்டு. கு... மேலும் பார்க்க

Kumbh Mela: கும்பமேளாவில் மாலை விற்ற பெண் யூடியூப் பிரபலமான கதை; யார் இந்த வைரல் பெண் Monalisa?

மகாகும்பமேளா விழா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி, முழு வேகத்தில் நடந்து வருகிறது. கும்பமேளாவிற்குச் சாதுக்களும், முனிவர்களும், பிரபலங்களும் வந்து குவிந்த வண்ணம் இருக... மேலும் பார்க்க

Most Watched Reel: 554 மில்லியன் பார்வைகளைக் கடந்த இன்ஸ்டா ரீல்ஸ் - உலக சாதனை படைத்த கேரள இளைஞர்!

21 வயதான முஹம்மது ரிஸ்வான் (@riswan_freestyle) கேரளாவைச் சேர்ந்தவர். இவர் ஃப்ரீஸ்டைல் ​​கால்பந்து வீரர் ஆவார். நவம்பர் 2023 அன்று , அவர் ஒரு ரீலை வெளியிட்டபோது, அது மிகவும் வைரலானது. அது தற்போது உலகில... மேலும் பார்க்க

`வாரத்துக்கு 70 & 90 மணிநேர வேலை... பொருளாதார உயர்வா? அடிமைத்தனமா?' - விகடன் கருத்துக்கணிப்பு

உலகெங்கிலும் முதலாளிகளின் பெரும் வணிக லாபத்துக்காக, உற்பத்திக்கான கருவியாகச் சக்கையாகப் பிழியப்பட்டு, கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர்களுக்கு, நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் 8 மணிநேர வே... மேலும் பார்க்க