செய்திகள் :

Sameera Reddy: `13 ஆண்டுகளுக்குப் பிறகு' - மீண்டும் நடிக்க வந்தது குறித்து சமீரா ரெட்டி

post image

பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு நடிப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீரா ரெட்டி தற்போது மீண்டும் நடிப்புக்குத் தயாராகியிருக்கிறார். சிம்னி என்ற படத்தின் மூலம் அவர் பாலிவுட்டில் மீண்டும் களமிறங்குகிறார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து சமீரா ரெட்டி அளித்த பேட்டியில்,'' ஒரு வருடத்திற்கு முன்பு நான் நடித்த டெஸ் என்ற படத்தை என் மகன் பார்த்தான். அதனைப் பார்த்துவிட்டு ஏன் அம்மா மீண்டும் நடிக்கவில்லை என்று என்னிடம் கேட்டான்.

குடும்பத்துடன் சமீரா

உடனே நான் உன்னையும், உன் சகோதரியையும் கவனித்துக்கொள்வதற்காக என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று சொன்னேன். உடனே மீண்டும் நடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று என்னிடம் அவன் கேட்டுக்கொண்டான். அவன் சொன்ன பிறகுதான் மீண்டும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது பதட்டமாக இருந்தது.

அங்கிருந்தவர்கள் உங்களுக்கு வயதாகிவிட்டது என்று சொன்னார்கள். நான் என்ன வயதாகிவிட்டது என்று திரும்ப கேட்டேன். ஆனால் இயக்குநர் `ஆக்‌ஷன்' என்று சொன்னவுடன் என்னுள் உறங்கிக்கொண்டிருந்த நடிகர் மீண்டும் எழுந்துவிட்டான். இயக்குநர் சொன்னபடி நடித்தேன்'' என்று சொல்லும் சமீரா ரெட்டிக்கு தற்போது 46 வயது. அவர் உடல் எடை பிரச்னையால் அவதிப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

சமீரா ரெட்டி ஆரம்பத்தில் மும்பையில் வசித்து வந்தார். மும்பை வாழ்க்கை பிடிக்காமல் கொரோனா காலத்தில் மும்பையை காலி செய்துவிட்டு குடும்பத்தோடு கோவாவிற்கு சென்றுவிட்டார். கடந்த 5 ஆண்டுகளாக கோவாவில் வசித்து வருகிறார். கோவா சென்றது குறித்து சமீரா ரெட்டி அளித்த பேட்டியில்,''என் குடும்பத்தோடு 2020ம் ஆண்டு கோவாவிற்கு சென்றுவிட்டேன். அங்கு சென்ற பிறகு மன அமைதி ஏற்பட்டுள்ளது. எனது வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கோவாவில் வசிப்பது மிகவும் வசதியாக இருக்கிறது. கோவா வாழ்க்கை எனது மனநிலையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியது. கோவா என்னை பெரிய அளவில் மாற்றிவிட்டது. குறிப்பாக மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு தாயாக என்னையும், என் குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதுதான் முக்கியம். அனைவரும் என்னிடம் ஏன் கோவாவிற்கு சென்றீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கும், என் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் இதை செய்தேன். மன அமைதிக்காகவே கோவாவிற்கு வந்தேன்''என்று தெரிவித்துள்ளார். தனது கோவா வாழ்க்கை குறித்து அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை சமீரா ரெட்டி பகிர்ந்து வருகிறார்.

`தென்னிந்தியர்களை பாலிவுட் ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்தது!’ - ஜூனியர் என்.டி.ஆர்

பாலிவுட்டுக்கு தென்னிந்திய சினிமாவை சேர்ந்த இயக்குநர்களும், நடிகர்களும் வருவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் எந்த ஒரு தென்னிந்திய இயக்குநர் அல்லது நடிகரால் நிலைத்து நிற்க முடிவ... மேலும் பார்க்க

SRK: "ஷாருக்கான் என் காலேஜ் சீனியர்; ஆனாலும், அவருடைய அம்மாவாக நடித்தேன்" - நடிகை ஷீபா சத்தா

'பதாய் ஹோ', 'பதாய் டு' உட்படப் பல பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ஷீபா சத்தா.இதைத் தாண்டி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களாகவும் இவர் நடித்திருக்கிறார்.இவர் 'ரயீஸ்', 'ஜீரோ' ஆகி... மேலும் பார்க்க

மீண்டும் சீரியல்; வைரலாகும் சம்பளம் விவரம்; "அதிக சம்பளத்திற்குக் காரணம் இருக்கு" - ஸ்மிருதி இரானி

முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார். அந்தத் தொடருக்காக அவர் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.டி.வி... மேலும் பார்க்க

Kajol: `அதையே மீண்டும் ஏன் இந்தியில் பேச வேண்டும்?'- மராத்தி விழாவில் நடிகை கஜோல்

மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள்-2025 விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை கஜோல் கலந்துகொண்டார். இந்திய சினிமாவுக்கு நடிகை கஜோல் செய்த பங்களிப்புக்காக மதிப்புமிக்க ராஜ் கபூர் ... மேலும் பார்க்க

Deepika Padukone: வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஏராளம். ஆனால், சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களில் தனி இடம் பிடிக்கின்றன. அந்த வகையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகி... மேலும் பார்க்க

``என்னுடைய கிரஷ்; அவருக்கு லெட்டார்லாம் போட்டேன்" - பாலிவுட் நடிகர் குறித்து எம்.பி மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் என்றால், தன்னுடைய ஆக்ரோஷமான பேச்சால் பெரும்பாலான எம்.பி-களின் கவனத்தை தன் பக்கம் திருப்பிவிடுவார். அதே நேரம் சமூக ஊடகங்களிலும், தனிப்... மேலும் பார்க்க