ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?
Sarathkumar: ''என் டாடிப்பா, என் மிஸ்டர் மெட்ராஸ்!''- சரத்குமாரின் மகன் ராகுலின் நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் சரத்குமார் - ராதிகா தம்பதிக்கு பிறந்த ராகுல் தன்னுடைய பட்டப் படிப்பை இப்போது முடித்திருக்கிறார்.

தன்னுடைய தேர்வு முடிவுகள் வெளிவந்திருப்பதாகவும், அதில் தான் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், அதைக் கண்டு சரத்குமார் மகிழ்ந்ததாகவும் குறித்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "என் தந்தை எனக்காக எல்லாவற்றையும் செய்திருக்கிறார். அவர் உண்மையிலேயே என் சூப்பர் ஹீரோ, என் சிறந்த நண்பர், இருளில் என் ஒளி.
என்னை வேறு ஒரு நாட்டிற்கு படிக்க அனுப்புவதற்காக என்னுடன் நேரம் செலவிடுவதை தியாகம் செய்த ஒரு மனிதருக்கு, அவரை உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதராக மாற்றுவதுதான் நான் செய்ய வேண்டிய விஷயம்.
நேற்று ஒவ்வொரு மகனும் ஏங்கும் அந்தத் தருணத்தை நான் அனுபவித்தேன்.
என் தேர்வு முடிவுகளைப் பெற்றேன், முதல் வகுப்பு ஹானர்ஸுடனும், சிறப்பு மதிப்பெண்ணுடனும் தேர்ச்சி பெற்றேன். அவருடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி என் நாளை, என் வாரத்தை, என் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியது.
என் டாடிப்பா, என் மிஸ்டர் மெட்ராஸ், நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், மிஸ்டர் வாசுதேவன், உங்கள் மகன் வெற்றி பெற்றுவிட்டான். லவ் யூ டாடிப்பா." என்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...