அமெரிக்காவின் தலையீடு இல்லை என திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா
Sarzameen: ``மோகன்லாலைப் போலவே கஜோல்.." - `சர்ஜமீன்' குறித்து அனுபவம் பகிரும் நடிகர் பிருத்விராஜ்
இயக்குனர் கயோஸ் இரானி இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் - கஜோல் நடிப்பில் வெளியானப் படம் 'சர்ஜமீன்'. கடந்த வாரம் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது.
இந்தப் படத்தில் நடிகை கஜோலுடன் நடித்த அனுபவத்தை பிருத்விராஜ் தனியார் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், ``கஜோல் அற்புதமானவர், அவர் உண்மையிலேயே திறமையான கலைஞர். உள்ளுணர்வுமிக்க நடிகை. இப்படியான நடிகர்களுடன் நடிப்பதில் மிகப் பெரிய விஷயம் உங்கள் கதாபாத்திரம் நடிப்பதற்கான இடம் எது என்பதைக் நம்மால் கணிக்கவே முடியாது.
அவர்களுடன் இரண்டு முறை ஒத்திகை பார்த்தாலும் அவர்களுக்கு இணையாக நடிக்க முடியாது. மோகன்லால் சாருடன் நடிக்கும் போதும் இது நடக்கும். ஒரு நடிகராக அவர் மிகவும் உள்ளுணர்வுள்ளவர். அவருடன் 5 டேக்குகள் எடுத்தால், ஒவ்வொரு டேக்கும் மற்றவற்றிலிருந்து வித்தியாசம் இருக்கும். கஜோல் அவரைப் போலவே இருக்கிறார்." என்று தெரிவித்துள்ளார்.
பிரித்விராஜ் அடுத்ததாக மலையாளத் திரைப்படமான 'விலாயத் புத்தா'-வில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் SSMB29 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...