செய்திகள் :

Sawadeeka: "அஜித் 102 டிகிரி காய்ச்சலோடு டான்ஸ் பண்ணார்" - 'விடாமுயற்சி' கல்யாண் மாஸ்டர் பேட்டி

post image

'விடாமுயற்சி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'Sawadeeka' வெளியாகி அஜித் ரசிகர்களை வைப் ஏற்றிக்கொண்டிருக்கிறது.

விஸ்வரூப வெற்றியை வேட்டையாட வெறித்தனமான முயற்சிகளுடன் பொங்கலுக்கு ரிலீஸாகிறது அஜித்தின் ‘விடாமுயற்சி’. படம் எப்போ ரிலீஸ் ஆகும்? எனக் கேட்டவர்களுக்கெல்லாம் ‘கொஞ்சம் பொருங்க பாய்’ எனச் சொல்லும் அளவுக்கு தாமதாகியிருந்தாலும் டீசர் அதனைத்தொடர்ந்து, தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை எகிறவைத்திருக்கிறது. குறிப்பாக, அஜித்தின் டான்ஸ் மூவ்மென்ட்கள்தான் சோஷியல் மீடியாவில் ஸ்டெப் பை ஸ்டெப் பாராட்டுகளை குவித்துவருகிறது. அஜித்தின் அல்டிமேட் டான்ஸரான கல்யாண் மாஸ்டரின் இளமை துள்ளும் கூலான நடனம் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் துள்ளவைத்துக்கொண்டிருக்க, கல்யாண் மாஸ்டரிடம் பேசினேன்...

sawadeeka ajith

“துணிவு படத்துக்குப்பிறகு மூன்று வருடங்கள் கழித்து 'விடாமுயற்சி' ரிலீஸ் ஆவதால, ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்போடு காத்துக்கிட்டிருக்காங்க. அதுவும் அஜித் சார் வேஷ்டி கட்டிக்கிட்டு குத்தாட்டம் போடுறதைதான் ரசிகர்கள் அதிகமா எதிர்பார்க்கிறாங்க. ஆனா, 'விடாமுயற்சி' பட 'Sawadeeka' பாட்டு கோட்டு சூட் போட்டுக்கிட்டு ரொம்ப க்ளாஸியான பாட்டு. டான்ஸ் ஸ்டெப் எல்லாம் கொஞ்சம் ஸ்லோவா இருக்கிறதால ரசிகர்கள் ஏற்றுக்குவாங்களான்னு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. ஆனா, இப்படியொரு வரவேற்பும் கொண்டாட்டமும் இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. இந்தப் பாடலை தாய்லாந்துல நான்கு நாள்கள் ஷூட் பண்ணினோம். ‘நீங்க கலக்குங்க கல்யாண்'ன்னு என்கிட்ட விட்டுட்டார், இயக்குநர் மகிழ் திருமேனி. இந்தப் பாட்டு வர்ற சூழ்நிலை ரொம்ப க்ளாஸ்ஸியானது. அதனால, டான்ஸும் க்ளாஸ்ஸா அமைஞ்சிடுச்சு. அஜித் சாருக்கும் அனிருத்துக்கும் மகிழ் திருமேனிக்கும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் ரொம்ப பிடிச்சுப்போச்சு. ரொம்ப சூப்பரா இருக்குன்னு பாராட்டினாங்க.

மகிழ் திருமேனி ரொம்ப திறமையான இயக்குநர். அஜித் மாதிரியே அவரும் அதிகம் பேசமாட்டார். அவரோட செயல்கள்தான் பேசும். அவரோட முதல் படத்திலேயே நான் ஒர்க் பண்ணிக்கியிருக்கேன். கடினமான உழைப்பாளி. அஜித்தோட உழைப்பைப்பற்றி சொல்லவே தேவையில்லை. ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தா எப்படி இருக்கும்? என்ன நடக்கும்? அதுதான், 'விடாமுயற்சி' படத்துல வெளிப்பட்டிருக்கு. அதை படம் பார்க்கும்போது நீங்க தெரிஞ்சுக்குவீங்க” என்கிறவரிடம் 'குட் பேட் அக்லி' பட அப்டேட்டையும் கேட்டோம்.

“'குட் பேட் அக்லி' படத்துல ஒரு பாட்டுக்கு நடனம் அமைச்சுருக்கேன். தேவிஸ்ரீ பிரசாத் இசையில பாட்டு செம்மையா வந்திருக்கு. ரசிகர்கள் பயங்கரமா கொண்டாடுவாங்க. நல்ல பெப்பி சாங். பாட்டு முழுக்கவே கொஞ்சம் வித்தியாசமான லுக்குல மெனக்கெட்டு ஆடியிருக்கார் அஜித் சார். கண்டிப்பா, ரசிகர்களுக்கு பிடிக்கும்” என்கிறவரிடம், "அஜித்தோட முதல் படத்திலிருந்தே டான்ஸ் மாஸ்டரா அவர்க்கூட பயணிச்சுக்கிட்டிருக்கீங்க. அவரோட விடாமுயற்சியான விஷயங்கள் என்னென்ன? உங்களோட விடாமுயற்சியான விஷயங்கள்னா என்னென்ன?" என்று கேட்டபோது,

அஜித் - த்ரிஷா

“அஜித் 'கல்லூரி வாசல்' படத்திலிருந்தே எனக்கு நல்ல நண்பர். சிறந்த மனிதநேயர். அவரோட 'உயிருக்கு உயிராக' படத்தின் மூலமாகத்தான் நான் டான்ஸ் மாஸ்டரா அறிமுகமானேன். அதுக்கப்புறம், எனக்கு பெருசா வாய்ப்புகள் வரல. அவர்கிட்ட சொன்னவுடனே, 'தீனா' படத்துக்கு வாய்ப்பை கொடுத்தார். ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’, ‘காதல் வெப்சைட் ஒன்று’ன்னு ரெண்டு பாடல்களுக்கும் நான்தான் டான்ஸ் மாஸ்டர். என் வாழ்க்கையில மிகப்பெரிய டர்னிங் பாயிண்டா அமைஞ்சது 'தீனா' பாடல்கள்தான். 'ஸ்வதீகா' பாடலுக்கு 'காதல் வெப்சைட்' பாட்டை ரசிகர்கள் மிக்ஸ் பண்ணி போடுறதைப் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு.

'பில்லா', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்', 'துணிவு'ன்னு அவருடைய பாடல்கள் என்னோட வாழ்க்கையில முன்னேறுவதற்கு எந்தளவுக்கு துணையா இருந்துச்சுன்னு சொல்லிக்கிட்டே போகலாம். 'உயிரோடு உயிராக' தொடங்கி எத்தனையோ பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டரா பணியாற்றியிருந்தாலும் அவர் என்னை, அதிகமா பாராட்டினது 'ஆலுமா டோலுமா' பாட்டுக்காகத்தான்.

நண்பரா இருந்தாலும் திறமைக்குத்தான் முக்கியத்துவம் தருவார். அதனாலதான், அவர்க்கூட தொடர்ந்து பயணிக்கமுடியுது. அவரோட விடாமுயற்சியான விஷயங்கள்ன்னா பைக் ரேஸ் மீதான காதல்தான். அந்த காலத்திலிருந்தே விடாமுயற்சியா பண்ணிக்கிட்டிருக்கார். பைக் ரேஸ்ன்னாலே அதிகமா செலவாகும். தன்னோட சொந்த காசுல பைக் ரேஸ் போறது மட்டுமில்லாம, அதை டீமா உருவாக்கி என்கரேஜ் பண்ணிக்கிட்டிருக்கார். அது, ரொம்ப பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஒரு விஷயத்தை பண்ணனும்னு நினைச்சா அதைக் கண்டிப்பா பண்ணிடுவார்.

விடாமுயற்சி

பைக் ரேஸ் மீதான காதலை இப்போவரைக்கும் அவர் விட்டுக்கொடுக்கல. எப்போதும் அதை நேசிச்சுக்கிட்டே இருக்கார். அப்படிப்பட்ட தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட மனிதரோடு பயணிச்சுக்கிட்டிருக்கேன். அதேமாதிரி, சினிமாவையும் ரொம்ப நேசிக்கிறார். எந்தளவுக்குன்னா, புரடியூசர் நம்பளால கஷ்டப்படக்கூடாது; நஷ்டப்படக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பார். உடம்பு சரியில்லைனாகூட நம்பளால ஷூட்டிங் பாதிக்கப்படக்கூடாதுன்னு முடிச்சுக் கொடுத்துடுவார்.

விடாமுயற்சி 'ஸ்வதீகா' பாட்டு பண்ணும்போது, அஜித் சாருக்கு 102 டிகிரியில் காய்ச்சல். இருமிக்கிட்டே இருந்தார். நாங்ககூட ரெஸ்ட் எடுக்கச் சொன்னோம். '40 டான்ஸர்கள் இருக்காங்க. இத்தனை டெக்னீஷியன்கள் பாதிக்கப்பட்டுடக்கூடாது. நான், அரைமணிநேரத்துல வந்துடுறேன்'னு ஆன்டி பயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கிட்டு காய்ச்சலோடே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நின்னுட்டார்.

மென்டலி வெரி வெரி ஸ்ட்ராங் பர்சன். மங்காத்தா படத்துக்கு அப்புறம் 15 வருசம் கழிச்சு த்ரிஷாவை பார்த்தேன். அஜித்தும் த்ரிஷாவும் கொஞ்சம்கூட மாறாம அதே லுக்கோடு இருக்காங்க. ரெண்டு பேரோட காம்பினேஷனே படத்தோட வெற்றியை உறுதி செஞ்சுடுச்சு.

ajith - kalyan master

அதேமாதிரி, என்னோட விடாமுயற்சின்னா இத்தனை வருடம் சினிமாவுல நிலைச்சு இருக்கிறதுதான். எத்தனையோ பேரு வர்றாங்க, போறாங்க. ஆனா, 38 வருசமா இந்தத் நிலைச்சு நிற்கிறேன். அதுவே விடாமுயற்சிதான். அதிகமா ஆசைப்படமாட்டேன். கிடைக்கிறதை ரொம்ப சின்சியரா பண்றேன். அது சக்சஸை கொடுக்குது. அடுத்ததா, சீக்கிரமே என்னை இயக்குநரா பார்க்கலாம். கதை வெச்சுக்கிட்டு டைரக்‌ஷனுக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். தயாரிப்பாளர் கிடைச்சா அதிலேயும் சக்சஸை கொடுப்பேன்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் உற்சாகத்தோடு.

Khushbu: `அண்ணாத்த படத்தில நடிச்சதுக்கு வருத்தப்பட்டேன், ஏன்னா...' -குஷ்பு ஓப்பன் டாக்

ரஜினின் அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் குஷ்பு.ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் அதிகமான விமர்சனங்கள... மேலும் பார்க்க

சகோதரிகளுடன் சமாதானம் ஆகிவிட்ட பிரபு, ராம்குமார் - சிவாஜி குடும்ப சொத்து விவாகரம் முடிவுக்கு வந்ததா?

நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, தேன்மொழி இருவரும் தங்கள் சகோதரர்கள் பிரபு, ராம்குமார் இருவர் மீதும் குடும்ப சொத்து தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது அவர்களு... மேலும் பார்க்க

Thalapathy 69: விஜய்யுடன் இணைகிறாரா சந்தானம் - பின்னணி என்ன?

புத்தாண்டில் விஜய்யின் 'தளபதி 69' படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவியதால், ரசிகர்கள் ஆவலுடன் தலைப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் தான் புது தகவலாகப் படத்தில் சந்தானம் இணைகிறார... மேலும் பார்க்க

Rajini: ``சமீபத்தில் நான் பார்த்த படம்... திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம்" -பாராட்டிய ரஜினி

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திரு.மாணிக்கம்'.இந்த டிஜிட்டல் க... மேலும் பார்க்க

விடா முயற்சி: ஆயிரம் மடங்கு அப்செட் ஆன அஜித்; ரிலீஸ் தள்ளிப்போனதன் பின்னணியில் நடந்தது இதுதான்!

இந்தப் புத்தாண்டு 'விடா முயற்சி'யின் டிரெய்லரோடு விடியும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக லைகா ஒன்றை அறிவித்தது. 'சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடா முயற்சி' திரைபப்டம் பொங்கல் வெ... மேலும் பார்க்க