செய்திகள் :

Seeman: "பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தபோது..." - தவெக கூட்டணி குறித்த கேள்விக்குச் சீமான் பளீச்

post image

நாம் தமிழர் கட்சியின் விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, "மும்மொழி கொள்கையில் தி.மு.க, அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன? தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? முதன் முதலில் இந்தியைத் திணித்தது யார்? இந்தியைத் திணித்தவர்களிடம் தி.மு.க கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லை?

செய்தியாளர் சந்திப்பு

ஒரே நாட்டில் ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சிறப்பு. இந்த நாட்டை பா.ஜ.க துண்டிக்கத் துடிக்கிறது. இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் மொழி வழியாக மாநிலங்கள் எதற்காகப் பிரிக்கப்பட்டன? இந்தி மொழி பயில வேண்டுமென்றால் அதற்கான சிறப்புக் காரணங்கள் என்ன? இந்திய மொழி இந்தி என எந்த சாசனத்தில் உள்ளது?

இந்தியா பலமொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்த ஐக்கியம், இந்திய மொழி இந்தி என்று யார் சொன்னது? இந்தி கற்பித்தல் மிகவும் ஆபத்தானது. நாடு எங்கும் இந்தியைத் திணிப்பது தேவையற்றது. இரண்டு, மூன்று மாநிலங்களில் பேசக்கூடிய இந்தி மொழியைத் திணிக்க நினைப்பது தவறு. இந்தி மொழி தேவையெனில் கற்றுக் கொள்ளலாம்.

இந்தி மொழி விவகாரத்தில் திராவிடர்களை நம்ப வேண்டாம். இந்தி மொழியை தி.மு.க உளமார எதிர்க்கிறதா? இந்தி திணிப்புக்கு எதிராக 800 பேர் போராடினார்கள். ஆனால் 18 பேர் எனக் கணக்கு காட்டினார்கள். இந்தியா வளர்ந்த நாடாகியும் இன்னும் மக்கள் பசி பட்டினியுடன் உள்ளனர். ஆங்கிலம் படிப்பது தான் அறிவு எனப் பொதுப்புத்தி உருவாகி உள்ளது. இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சி என்றால் வட மாநிலத்திலிருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்திற்கு வேலைக்காக வருகிறார்கள்.

சீமான்

இலங்கை, பங்களாதேஷில் நடந்தது இந்தியாவில் நடக்கும், ஏதாவது மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம், திராவிடன் அரியணையில் உட்கார வைக்க வட இந்தியர்தான் தேவைப்படுகிறார். தேர்தல் வியூகங்களுக்கு வட இந்தியர்களுக்குப் பதிலாக இங்குள்ள ஹெச்.ராஜா, ரங்கராஜ் பாண்டேவைப் பயன்படுத்தலாமே?

நான் நோட்டுக்காக, சீட்டுக்காக அரசியலுக்கு வரவில்லை. நம் நாட்டுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். தன்னை முன் நிறுத்தி கொள்பவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிச் செல்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காகக் கட்சி என்று செயல்பட வேண்டும். சீமானுக்குப் பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். நேர்மையாகக் கட்சி நடத்த வேண்டுமானால் சர்வாதிகாரியாகச் செயல்படுவேன். நான் குட்டை, குளத்தில் வலை வீசவில்லை. தமிழ்த் தேசியம் எனும் பெருங்கடலில் வலை வீசுகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தி.மு.க, தெருவில் இறங்கி ஏன் போராடுகிறது? மீனவர்கள் கைது, இந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீடு விவகாரங்களில் ஏன் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடுகிறது? திராவிடம் பேசாமல், பெரியார் குறித்துப் பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளேன். ஆட்சி அதிகாரத்திலிருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை. ஆகவே தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது சரியாக வராது" எனக் கூறினார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க

CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம்

மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கலாம் என்று மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவித்திருக்கிறது.தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக, மத்திய மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையே பிர... மேலும் பார்க்க

Veena Reddy: USAID நிதியை நிறுத்திய ட்ரம்ப்... பாஜக எம்.பி குறிப்பிட்ட வீணா ரெட்டி; யார் இவர்?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா USAID மூலம் நிதியுதவி செய்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. 1950 களில் இந்தியாவின் வாக்களிப்போர் சதவிகிதம் சொல்லிக்கொள்ளுமளவு இல்லை. அதனால், இந்தியாவி... மேலும் பார்க்க

20 ஆண்டுகள்... ரூ.47 லட்சம் சொத்து வரி பாக்கி; நூதன முறையில் வரி வசூல் செய்த தஞ்சாவூர் மாநகராட்சி!

தஞ்சாவூர் சீனிவாசன் பிள்ளை சாலையில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் 80 கடைகள் உள்ளன. வணிக வளாக நிர்வாகத்தினர் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் இருந்துள்ளன... மேலும் பார்க்க

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம்; ஒருவர் கைது... சிறையிலடைத்த போலீஸ்!

கடந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான வெள்ள பாதிப்புகளுக்குள்ளாகின. இதில், விழுப்புரம் மாவட்டத்தின் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில்... மேலும் பார்க்க

``20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால்..." - மநீம 8-வது ஆண்டில் மனம் திறந்த கமல்ஹாசன்

தமிழக அரசியல் வரலாற்றில் இருபெரும் ஆளுமைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர், 2018 பிப்ரவரி 21-ம் தேதி `மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். மாற்ற... மேலும் பார்க்க