செய்திகள் :

Shreyas Iyer: "எங்களை மக்கள் ரோபோக்களாகப் பார்க்கிறார்கள்" - சிகிச்சை வலி குறித்து ஸ்ரேயஸ் உருக்கம்

post image

இந்தியாவில் 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஸ்ரேயஸ் ஐயர் ஒன்றரை வருடமாக இந்திய அணியில் புறக்கணிப்பட்டார்.

ஆனால், அதே காலகட்டத்தில் ஐ.பி.எல் உட்பட அனைத்து உள்ளூர் கிரிக்கெட் கோப்பைகளையும் வென்று, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அணிக்குள் நுழைந்து சாம்பியனானார்.

இருப்பினும், நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் நடப்பு ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் ஸ்ரேயஸ் ஐயர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டார்.

Shreyas Iyer - ஸ்ரேயஸ் ஐயர்
Shreyas Iyer - ஸ்ரேயஸ் ஐயர்

அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 2023-ல் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு கால் தற்காலிகமாகச் செயலிழந்ததையும், அப்போது தான் கடந்துவந்த வலியையும் பற்றி ஸ்ரேயஸ் ஐயர் மனம் திறந்திருக்கிறார்.

GQ India ஊடகத்துடனான நேர்காணலில் இதைப் பகிர்ந்துகொண்ட ஸ்ரேயஸ் ஐயர், "நான் கடந்து வந்த வலியை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு கால் முழுமையாகச் செயலிழந்துவிட்டது.

முதுகெலும்பு அறுவை சிகிச்சை மூலம், முதுகில் ஒரு ராட் (Rod) வைத்து அதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், எனக்கு நரம்பு பாதித்திருந்தது.

உண்மையில் மிகவும் ஆபத்தானது. நுனி கால் வரை வலி பரவியது. அது மிகவும் பயமாக இருந்தது.

Shreyas Iyer - ஸ்ரேயஸ் ஐயர்
Shreyas Iyer - ஸ்ரேயஸ் ஐயர்

விளையாட்டு வீரர்களை மக்கள், ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட வேண்டிய ரோபோக்களாகப் பார்க்கிறார்கள்.

ஆனால், திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது" என்று கூறினார்.

அந்த முதுகுவலி சிகிச்சை காரணமாக 2023 ஐ.பி.எல் மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியையும் ஸ்ரேயஸ் ஐயர் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Rinku: `என் வருங்கால மனைவி அப்போ அழுதாங்க' - வாழ்வை மாற்றிய தருணம் குறித்து நெகிழும் ரின்கு சிங்

ஐபிஎல் வரலாற்றில் கடந்த சில சீசன்களில் ஒரேயொரு போட்டியின் மூலம் ஆல் ஓவர் இந்தியாவுக்கே பேசுபொருளானவர் ரின்கு சிங்.2023-ல் குஜராத் அணிக்கெதிரான அந்தப் போட்டியில் கடைசி ஓவரில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல... மேலும் பார்க்க

Dhoni: "தோனிதான் என்னை அப்படி மாற்றினார்" - தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்

இந்திய அணியில் தோனிக்கு முன்பு அறிமுகமாகி, பின்னர் தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறனால் அணிக்குள் நிலையான இடத்தை தக்கவைக்க முடியாமல் போன விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவர் தமிழக வீ... மேலும் பார்க்க

Asia Cup: "பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இருப்பாரா?" - கேப்டன் சூர்யகுமார் அளித்த பதில் என்ன?

ஆசிய கோப்பை தொடர் ஆப்கானிஸ்தான் vs ஹாங்காங் போட்டியுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.நாளை, இந்தியா தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.இவ்வாறிருக்க, சூர்யகுமார் யாதவ... மேலும் பார்க்க

Richard Mille: `ஆசியக் கோப்பை பரிசுத்தொகையை விட 8 மடங்கு அதிகம்' - ஹர்திக்கின் யுனிக் வாட்ச் வைரல்!

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசியக் கோப்பைக்குத் தீவிரமாகத் தயாராகி வருகிறது.இன்று (செப்டம்பர் 9) தொடங்கும் இத்தொடரில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், ஹாங் க... மேலும் பார்க்க

IND vs AUS: இந்திய 'ஏ' அணியை அறிவித்த பிசிசிஐ - கேப்டனாகும் ஸ்ரேயஸ்!

2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடிக்கத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க

Dhoni: "ஐபிஎல்லில் டக்அவுட்டை நாடாத ஒரே கேப்டன்" - ரிக்கி பாண்டிங் புகழாரம்!

கிரிக்கெட் உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் வீரர் தோனி. அவருடைய பேட்டிங், கீப்பிங் திறமைகளைக் கடந்து கேப்டன்சிக்காகவும் புகழப்பட்டவர். Dhoni-யின் கேப்டன்சிஅவர் எடுக்கும் முடிவுகள் உள்ளுணர... மேலும் பார்க்க