Siragadikka aasai : சிந்தாமணியின் திட்டம் இதுதான் - ஏமாற்றப்பட்ட மீனா எப்படி சமாளிப்பார்?
சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் பரசு மகளின் திருமண ஏற்பாடுகள், மீனாவின் புதிய பிஸ்னஸ், ஸ்ருதி அம்மா செய்த பிரச்னை என கதை நகர்ந்தது. கூடவே இரண்டு காதல் ஜோடிகளும் புதிதாக கைகோர்த்துள்ளனர்.
ஸ்ருதி அம்மா அண்ணாமலையிடம் செக் நீட்டிய விஷயத்தை ஸ்ருதி, ரவியிடம் முத்து சொல்கிறார். ரவிக்கு புதிதாக ஹோட்டல் பிஸ்னஸ் தொடங்க ஸ்ருதியின் அம்மா பணம் கொடுக்க தயாராக இருப்பதாக விஜயா சொல்ல, ரவி கோபப்படுகிறார். எல்லா விஷயத்திலும் விஜயாவை மூக்குடைக்கும் ஸ்ருதி, இந்த விஷயத்தில் மட்டும் ஆதரவாகப் பேசுகிறார்.
`என் அம்மா நம் நல்லதுக்கு தான் சொல்கிறார்’ என்று ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் ஸ்ருதி.

ரவி சுயமரியாதையுடன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் ஸ்ருதி யதார்த்தமாக தன் தரப்பை முன்வைக்கிறார். இது விஜயாவுக்கு சாதகமாக முடிகிறது. விஜயாவை பொறுத்தவரை ரவி ஸ்ருதி வீட்டில் பணம் வாங்கி தொழில் தொடங்க வேண்டும்.
`மீனாவை சிக்க வைக்க...’
இதனிடையே மீனாவுக்கு புதிய மண்டப ஆர்டர் கிடைக்கிறது. இந்த விஷயத்தை மீனா முத்துவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். ஆனால் இந்த ஆர்டரில் முன்பணம் கொடுக்கவில்லை என்றும் 2 லட்சம் வரை செலவாகும் என்றும் சொல்கிறார். விஜயா இந்த விஷயத்தை சிந்தாமணியிடம் கால் செய்து சொல்கிறார், சிந்தாமணி மீனாவை சிக்க வைக்கவே இந்த ஆர்டர் என்கிறார். இந்த ஆர்டருக்கு பிறகு மீனா இந்த தொழிலை விட்டே போய்விடுவார் என்றும் தீர்க்கமாக சொல்கிறார்.

இந்த வாரத்திற்கான ப்ரோமோவில், மீனா 2 லட்சம் செலவு செய்து ஆர்டரை செய்து முடிக்கிறார், மண்டபத்தில் அலங்காரப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். மீனாவும் நம்பி கையெழுத்துப் போடுகிறார். வேலை முடிந்ததும் மீனா மண்டப மேலாலளிரடம் பணம் கேட்கிறார். ஆனால் அவர் முன்னமே கொடுத்துவிட்டதாகவும், பணத்தை மீனா வாங்கிக் கொண்டு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டதாகவும் சொல்கிறார். மீனாவுக்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பது புரிகிறது. இந்த விஷயத்தில் சிந்தாமணி சம்பந்தபட்டிருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுப்பிடிப்பார்களா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரிய வரும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
