செய்திகள் :

Siragadikka aasai : மனோஜால் முத்துவுக்கு வந்த புதிய பிரச்னை - தீர்வு காண்பாரா பாட்டி?

post image

சிறகடிக்க ஆசை சீரியலில் இயக்குநர் வைத்த அதிரடி காட்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டது. ரோகிணி மொத்தமாக மாட்டிக் கொண்டிருந்தால் ஸ்வாரஸ்யமாக இருந்திருக்காது. எனவே அவரின் மலேசியா பொய்கள் மட்டும் வெளிப்பட்டுள்ளது. அதற்கே விஜயா சந்திரமுகியாக மாறிவிட்டார். இன்னும் முதல் கல்யாணம் பற்றியெல்லாம் தெரிந்தால் அவ்வளவு தான்.

விஜயாவின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. முத்து, மீனா ரோகிணியை விமர்சித்தாலும், அவர் தரப்பு விளக்கத்தை கேட்டிருக்கலாம் என மானோஜிடம் கூறுகின்றனர்.

மனோஜ் முத்துவின் பேச்சை கேட்கத் தயாராக இல்லை. அண்ணாமலையும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், ஆனால் மனோஜ் ரோகிணியிடம் பேசவோ, வீட்டிற்கு அழைத்து வரவோத் தயாராக இல்லை. விஜயா பார்வதியின் வீட்டில் இருக்கிறார். ரோகிணி வித்யாவின் வீட்டில் இருக்கிறார்.

இந்த காட்சிகளை பார்த்த போது சிறகடிக்க ஆசை சீரியலை வைத்து வெளியான ஒரு மீம் தான் ஞாபகத்திற்கு வந்தது.

``விஜயாவுக்கு பார்வதி கிடைத்ததுப் போல் ரோகிணிக்கு வித்யா கிடைத்தது போல் எனக்கொரு தோழி கிடைக்க வேண்டும்” என்று பகிர்ந்திருந்தனர். இந்த மீமில் உள்ளது போல் இவர்களின் காம்போவில் காட்சிகள் ரசிக்க வைக்கின்றனர்.

விஜயா மீனாவுக்கு எதிராகத் திட்டம் போடும்போது பார்வதி கொடுக்கும் கவுண்டர்கள், ரோகிணி பொய்களை தயார் செய்யும் போது வித்யா கொடுக்கும் கவுண்டர்கள் சிரிக்க வைக்கிறது. பெரும்பாலான சீரியல்களை போல டாக்ஸிக் விஷயங்கள் இல்லாமல் சீரியலை லைட்டாக உணர வைப்பது இதுபோன்ற நண்பேன்டா காட்சிகள்தாம்!

அண்ணாமலைக்கு பரசு, மனோஜுக்கு பார்க் ஃப்ரண்ட், முத்துவுக்கு செல்வம் என சீரியலில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரோகிணி சொன்ன பொய்களை ஜீரணிக்க முடியாத மனோஜ் தன் பார்க் நண்பருடன் மது அருந்துகிறார். பார்க் நண்பர் மது அருந்தவில்லை, மனோஜ் அதிகமாக மது அருந்திவிட்டு ‘என் பொண்டாட்டி பொய் சொல்லிட்டா” என்னும் வசனத்தை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

பைக்கில் வரும்போது டிராஃபிக் போலீஸான அருணிடம் மாட்டிக் கொள்கிறார். மனோஜ் குடித்திருந்தாலும், வாகனம் ஓட்டி வந்த நண்பர் குடிக்கவில்லை என்பதால் டிராஃபிக் போலீஸ் அனுப்பி வைக்கின்றனர். ஆனாலும் மனோஜ் செய்த ரகளையால் கடுப்பான அருண் மனோஜை காவல்நிலையம் அழைத்து செல்கிறார். ஏற்கனவே முத்துவை ரவுடியாக நினைத்துக் கொண்டிருக்கும் அருணுக்கு மனோஜ் அவரின் தம்பி என்பது தெரிந்தால் மேலும் எரிச்சலூட்டும். சீதா-அருண் காதலில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.

நேற்று வெளியான ப்ரோமோவில், அண்ணாமலை கண்ணீருடன் மனோஜை காவல்நிலையத்தில் இருந்து அழைத்து வருகிறார். மனோஜின் நிலையை பார்த்து ஒரு அப்பாவாக மிகவும் வருத்தப்படுகிறார் அண்ணாமலை. விஜயாவுக்கு ரோகிணி பணக்கார வீட்டு பெண் இல்லை என்பது தான் முக்கிய பிரச்னை, ஆனால் அண்ணாமலைக்கு ரோகிணி உண்மையாக இல்லாதது தான் பிரச்னை.

இந்த பிரச்னைக்கு முடிவுக்கட்ட முத்துவும் மீனாவும் ஊரில் இருந்து பாட்டியை வரவழைக்க நினைக்கின்றனர். பாட்டி இந்த விஷயத்தை எப்படி கையாள்வார்? பொறுத்திருந்து பார்ப்போம்!

`அது என் பர்சனல்' - ரெட் கார்டு சர்ச்சை; சீரியல் விலகல் குறித்து ரவீனா

விஜய் டிவியின் 'சிந்து பைரவி' சீரியலில் கமிட் ஆகிவிட்டு,பிறகு விலகிய 'பிக் பாஸ்' ரவீனா தாஹா சின்னத்திரையில் வேறு சீரியல்களிலோஅல்லது ரியாலிட்டி ஷோக்களிலோவருவதற்கு ரெட் கார்டு போடப்பட்டிருக்கிறது' என்கி... மேலும் பார்க்க

காரைக்குடியில் செட்டிலா? 'மெட்டி ஒலி' பார்ட் 2 வா? |இப்ப என்ன பண்றாங்க |திருமுருகன் பகுதி 3

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இப... மேலும் பார்க்க

Siragadikka aasai : ரோகிணி அறையில் க்ருஷின் உடையை கண்டுப்பிடித்த முத்து, மீனா - அடுத்து?

சிறகடிக்க ஆசை சீரியல் த்ரில்லாக நகர்கிறது. ரோகிணி மாட்டிக் கொண்டது ஒருபுறம் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தாலும், அடுத்தடுத்து கதையில் நடக்கும் ட்விஸ்ட் சீரியலுக்கு பாராட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளது. ... மேலும் பார்க்க

CWC : விரைவில் `குக்கு வித் கோமாளி சீசன் 6' - புது கோமாளி அவதாரம் எடுக்கும் பிக் பாஸ் பிரபலம்?

`குக்கு வித் கோமாளி' இளைஞர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களுள்ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கெனதனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. புதிய புரொடக்‌ஷன் நிறுவனம் கையிலெடுத்த `குக்கு வித் கோமாளி சீசன் 5' நி... மேலும் பார்க்க

'அம்மா, அப்பா இல்லைன்னா பிச்சை தான் எடுத்துட்டிருந்திருப்பேன்!' - `கனா காணும் காலங்கள்' ராகவேந்திரன்

`கனா காணும் காலங்கள்' தொடரின்மூலம் பரிச்சயமானவர் ராகவேந்திரன். இவர்தொடர்ந்து சில தொடர்களிலும் நடித்திருந்தார். மீடியாவைவிட்டு விலகப்போவதாக முன்பு இவர் அறிவித்திருந்தார். அந்த செய்தி வைரலாகப் பரவியது. ... மேலும் பார்க்க