வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
Siragadikka Aasai : `வெடிக்கப் போகும் ப்ரளயம்' - ரோகிணிக்கு அடுத்த பிரச்னை பார்சல்
சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடில் ரோகிணிக்கு விஜயா கடுமையான தண்டனைகளை கொடுக்கிறார். அறைக் கதவை சாத்தக் கூடாது, மனோஜுடன் பேசக் கூடாது, அனைவருடனும் அமர்ந்து சாப்பிடக் கூடாது என ரோகிணியை வதைக்கிறார் விஜயா.
விஜயாவுக்கு ரோகிணி நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றெல்லாம் கோவமில்லை, தன்னிடம் சொல்லாமல் செய்துவிட்டார்களே என்ற கோபம் தான். இதற்கு முன்னர் இதே விஜயா தான் மனோஜுக்காக மீனாவின் நகைகளை யாருக்கும் தெரியாமல் அடமானம் வைத்தார். மனோஜ் விஜயாவின் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என்ற பொசஸிவ்னஸும் இதற்குக் காரணம்.
இதனிடையே மீனா தன் குடும்பத்தினரிடம் வீட்டில் நடந்ததை சொல்லும்போது, சத்யா ரோகிணியை பற்றிய மற்றொரு உண்மையை மீனாவிடம் சொல்கிறார். ரோகிணி அடிக்கடி சிட்டியை பார்க்க வருவார் என்றும் பணம் வட்டிக்கு வாங்குவார் என்றும் சொல்கிறார்.
இதை கேட்டு மீனா அதிர்ச்சியடைகிறார். ரோகிணிக்கு அப்படி என்ன பணக் கஷ்டம். சிட்டியின் மோசமான நடவடிக்கைகள் தெரிந்தும் ரோகிணி ஏன் அவருடன் பேசுகிறார் என்று மீனா யோசிக்கத் தொடங்குகிறார். இதனை வீட்டில் இருக்கும் முத்துவிடமும் சொல்கிறார். முத்துவும் அதிர்ச்சியடைகிறார். உடனே இதனை என்னவென்று கண்டுப்பிடிக்க வேண்டும், ரோகிணியிடம் ஏதோ ரகசியம் உள்ளது என்று இருவரும் நம்புகின்றனர்.
ரோகிணி சாப்பிட வருகிறார். விஜயா அவரை சேரில் இருந்து எழுப்புகிறார். அனைவருடனும் சேர்ந்து சாப்பிக் கூடாது என்கிறார். ஆனாலும் மனோஜ் ரோகிணிக்காக எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். மனோஜ் முழுவதுமாக விஜயாவின் பேச்சை மட்டுமே கேட்பது அங்கிருப்பவர்களை எரிச்சலூட்டுகிறது. ரோகிணி விஜயா தன்னை தண்டிப்பது சரி தான் என்பது போல் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அங்கிருந்து நேராக விஜயாவின் தோழி பார்வதி வீட்டிற்கு சென்று அனுதாபம் தேடுகிறார். தன்னை ஒரு தியாகி என்பது போல் சொல்லி அழுகிறார். விஜயாவை சரியாக புரிந்து வைத்திருப்பது பார்வதி மட்டும் தான். ரோகிணி நீ விஜயா கிட்ட இத சொல்லிட்டு செஞ்சிருந்தா அவளே உனக்கு பணம் கொடுத்திருப்பா” என்கிறார்.
தனக்காக முதலில் அண்ணாமலையிடம் பேசிய ரோகிணி இப்போது பார்வதியிடம் பேசுகிறார். பார்வதி விஜயாவுக்கு அட்வைஸ் செய்வார் என்பது ரோகிணிக்கு நன்றாகத் தெரியும்.
எப்படியும் விஜயா சில தினங்களில் சமாதானம் ஆகிவிடுவார். அதற்குள் முத்து ரோகிணியை பற்றிய உண்மைகளை அறிய நிறைய வாய்ப்புகள் உள்ளது. செருப்பு தைக்கும் பெரியவர்களிடம் இருக்கும் முத்துவும் மொபைல், சிட்டிக்கும் ரோகிணிக்கும் இருக்கும் டீலிங் என பல உண்மைகளை அவர் தெரிந்து கொள்ளப் போகிறார். மீண்டும் ஒரு பிரளயம் வெடிக்கப் போகிறது.