2023-24-இல் பாஜகவுக்கு ரூ.2,243 கோடி நன்கொடை: ஏடிஆா் அறிக்கை தகவல்
Sivakarthikeyan: அஜித் பாடலுக்கு வைப் செய்த சிவகார்த்திகேயன் - உற்சாகமான ரசிகர்கள்!
நடிகர் சிவகார்த்திகேயன் நண்பர்களுடன் இணைந்து கரோக்கே பாடி வைப் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இன்று அவர் பதிவிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில், நடிகர் அஜித்தின் வாலி படத்தில் வரும் ஓ சோனா பாடலை நண்பருடன் இணைந்து பாடுகிறார்.
இந்த வீடியோ வெளியான 2 மணி நேரத்துக்குள் 2.8 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இல்லை என்பதால், அவரது ஜாலியான பக்கத்தைப் பார்ப்பது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

வீடியோவில் அருண் ராஜா காமராஜ் மற்றும் சில நண்பர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அந்த பதிவின் கேப்ஷனில், "நாங்க கும்பளாக சுத்துவோம், ஐயோ அம்மான்னு கத்துவோம்" என கானா பாடலின் வரிகளைப் பகிர்ந்து நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயன் ஏற்கெனவே திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது நமக்குத் தெரியும். வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் மாவீரன் வரை அவரது படங்களிலும் பிற படங்களிலும் அவர் பாடிய பல பாடல்கள் ஹிட் ஆகியிருக்கின்றன.
இந்த வீடியோவில் "நாங்களே பாடி, நாங்களே கைதட்டிக்குவோம், இதைச் செய்ததற்கு சாரி ஹரிஹரன் சார், தேவா சார்" என அடக்கமாக கேப்ஷன் போட்டுள்ளார்.

ரசிகர்கள், சிவகார்த்திகேயன் இதேப்போல நிறைய வீடியோக்களைப் பதிவிட வேண்டும் என உற்சாகமாக கமண்ட் செய்து வருகின்றனர்.
Sivakarthikeyan லைன்அப்
மேலும் இது ஒரு த்ரோபேக் வீடியோ என்றும் மென்ஷன் செய்துள்ளார்.
சிவகார்த்திக்கேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி திரைப்படம் இந்த ஆண்டில் வெளியாகவிருக்கிறது.
சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் பராசக்தி திரைப்படம் 2026 பொங்கலில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களாக உள்ளன.