Soori: 'எனது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் இது' - 'விடுதலை 2' வெற்றி குறித்து சூரி நெகிழ்ச்சி
'விடுதலை-1' வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவான 'விடுதலை- 2' டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் "விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் எனது திரை வாழ்க்கையை மாற்றிய படங்களாக எப்போதும் இருக்கும். குமரேசன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.
இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய என்னுடைய இயக்குநர் வெற்றிமாறன் சார், எனது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் எனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பெரிய நன்றி.
அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் எனது பாராட்டுகள். உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தில் நான் இந்த மைல்கல்லை எட்டியிருக்க முடியாது.
உண்மையான அன்பு மற்றும் ஆதரவிற்காக அனைத்து ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் எனது நன்றிகள். நீங்கள் தான் எனது மிகப்பெரிய பலம்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...