'StartUp' சாகசம் 12 : ஈரோட்டில் இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங் செய்து அசத்தும் இளைஞர்!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் விளம்பரத்துறை, புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. பாரம்பரிய விளம்பர முறைகளில் இருந்து சமூக ஊடகத்திற்கு வந்து, அங்கிருந்து இப்போது புதிய சமூக ஊடக செல்வாக்குமிக்கவர் (இன்ஃப்ளுயன்சர்கள்) மூலம் விளம்பரம் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது.
கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் வணிக கவனிப்பாளர் சந்தை ₹1,200 கோடி மதிப்பை எட்டியுள்ளது, 2030-ல் 3,300 கோடி சந்தை மதிப்பை சமூக ஊடக செல்வாக்குமிக்கவர்கள் வழியே பெற முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், குறைந்த செலவில் அதிக பலனை பெற இம்முறையை நாடுகின்றன. இதற்கு முன்பு பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த துறை சாதககமாக இருந்து வந்தது. ஏனெனில் விளம்பரம் செய்வது பாரம்பரிய விளம்பரப்படுத்துதலில் பெரும் செலவாக இருந்தது. ஒரு புறம் படப்பிடிப்பு செலவு, இன்னொரு புறம் பெரும் நடிகர்கள்/நடிகைகளுக்கு சம்பளம் என செலவு மிக அதிகமாக இருந்து வந்தது. ஆனால் இன்று சாதாரண சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கூட ரூ.500க்கும் இன்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்ய முடிகிறது. இப்போது அதிலிருந்து 10,000 முதல் 50,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட சமூக ஊடக செல்வாக்குமிக்கவர்கர்கள் மூலம் விளம்பரம் செய்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ஏனெனில் ஒவ்வொரு இன்ஃப்ளுயன்சர்களும் ஒரு துறையை மட்டும் கவனம் செலுத்தி, அந்தத் துறை சார்ந்த செய்திகளை மட்டுமே பதிவதால், அந்தத்துறை சார்ந்தப் பொருட்களை விளம்பரம் செய்வது வெகு எளிது. கிராமப்புறத்தில் உள்ளவர்கள் கூட இன்று டிஜிட்டல்சந்தையில் ஒரு கவனிப்பாளராக இருந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களால் விரைவு வணிகம் எனப்படும் கியூ காமர்ஸ் அதிகமாக வளர்ந்துவருகிறது. உள்ளூர் மொழி கவனிப்பாளர்கள் மூலம் பிராண்டுகள் கிராமப்புற வாடிக்கையாளர்களை சென்றடைகின்றன.
இதிலும் சிக்கல்கள் உள்ளன. இன்ஃப்ளுயன்சர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த கடுமையான வழிகாட்டுதல்கள் தேவை. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற செல்வாக்குமிக்கவர்கள் சந்தை பெருகிவருகிறது. இதையே ஒரு தொழிலாக ஒரு கல்லூரி முடித்த இளைஞர் ஒருவர் செய்துவருகிறார்.
ஈரோட்டை மையமாகக் கொண்டு இன்சர் டெக்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனவத்தை நடத்திவருகிறார் அரவிந்த், இவருடைய நிறுவவனம் இன்ஃப்ளுயன்சர்கள் சந்தையில் இடம் சார்ந்து, துறை சார்ந்த கவனிப்பாளர்களை அடையாளம் கண்டு தேவைப்படும் நிறுவனங்களின் பொருள் விற்பனை மற்றும் அறிமுகத்திற்கு பணியாற்றிவருகிறார். இனி அவரிடம் அவர் அனுபவத்தை கேட்கலாம்...

``என் பெயர் அர்விந்த், நான் இன்சர் டெக்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் எனும் இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங் ஏஜென்சி நடத்தி வருகிறேன். இன்ப்ளூயன்சர் சேவையை தொடங்குவதற்கு முன், 22 வயதில் MBA நிதியியல்-சந்தையாக்கம் படிக்கும்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் Google Ads, Facebook Ads மற்றும் போஸ்டர் வடிவமைப்புகள் போன்ற பணிகளை செய்தேன்.
என்னிடம் வந்த வாடிக்கையாளர்கள், Facebook Ads மூலம் நல்ல பார்வையாளர்கள் கிடைக்கிறது, ஆனால் வணிக வாய்ப்பு விகிதம் (Conversion Rate) மிகக்குறைவாக உள்ளது என கூறினர். மேலும் அதிலிருந்து வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஏற்பட்டாலும் அவற்றிலிருந்து பெறும் வணிக வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது என்பதையும் உணர்ந்தேன்.
அப்போதுதான் இன்ஃப்ளுயன்சர் மார்க்கெட்டிங், மார்க்கெட்டிங் உத்தியாக உருவாகி, இந்தியாவில் வேகமாக வளர்வதை கவனித்தேன். மேலும், பிரபல யூட்யூபர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள், அவர்களின் பின்தொடர்பவர்களிடம் நம்பிக்கையை உருவாக்கி வைத்துள்ளனர். இதனால், அவர்கள் ஒரு தயாரிப்பு அல்லது சேவையை பரிந்துரைக்கும்போது அதன் வணிக விகிதம் (Conversion Rate) அதிகமாக இருந்ததைப் பார்த்தேன். அதன்பின்னர் அந்தத்துறை சார்ந்து ஆராய்ச்சி செய்தபோது, இந்த துறையின் சந்தை மதிப்பு ₹800 கோடி என்ற நிலையில் இருந்தது. ஆனால் தற்போது ₹1,200 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 2030க்குள் ₹3300 கோடியை கடந்துவிடும் வாய்ப்பு உள்ளது என தெரிந்தது, அதனால் துணிந்து இந்த நிறுவவனத்தை ஆரம்பித்தேன்.
இதுவரை நாங்கள் பணியாற்றிய நிறுவனங்களின் திட்டத்தில் இதுவரை செய்த விளம்பரங்கள் 85% வெற்றியுடன் முடிந்துள்ளன என்பது எங்கள் சிறப்பம்சம்”
`உங்கள் மிகச் சிறந்த மூன்று பிரசாரங்களை பற்றி சொல்லுங்களேன்..!
``இந்தியாவின் பெரும்பாலான இன்ஃப்ளுயன்சர்கள் ஒரு தயாரிப்பைச் சரியாக ஆய்வு செய்யாமல் விளம்பரம் செய்கின்றனர். இதனால், பயனர்கள் தவறான தேர்வுகளை செய்து பாதிக்கப்படுகின்றனர்.
இன்ஃப்ளுயன்சர்கள் தயாரிப்பு பற்றிய முழு தகவலை ஆராயாமல் வீடியோ உருவாக்குகிறார்கள். இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த நஷ்டம் அடைகிறார்கள்.
மெதுவாக வளரக்கூடிய விளம்பர உத்திகள் பயன்படும் போது, எப்போது ஒரு வீடியோ ட்ரெண்டாகும் என்பதை கணிக்க முடியாது. இதற்கு முக்கிய காரணங்கள்:
• அல்கோரிதம் மாறுபடுதல்
• வாடிக்கையாளர்களின் விருப்பம் மாற்றம் அடைவது
இதனால் நாங்கள் எங்கள் நிறுவனத்தின் வணிக ஆய்வாளர்கள் வழியே பொருள், அதன் துறையில் எப்படி சந்தைப்படுத்துகிறார்கள், அவர்களுக்கு இப்போது என்ன டிரெண்ங்கில் உள்ளது என பல விதமான KPI ( Key Performance Indicator) களைக்கொண்டு நாங்கள் வணிகத்தை தீர்மானிக்கிறோம். அதன் பின்னர் அந்தத் துறை சார்ந்த இன்ப்ளூயன்சர்களைக் தொடர்புகொண்டு செயல்படுத்திவருகிறோம்."

``உங்களின் முக்கிய வாடிக்கையாளர்கள் யார்?”
``Cavin Care, Team Educational Institute, Karnan Pattu Centre, Cashify, Nxt Wave, Dimaak Tours, Credait, Wild Honey Hunters உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றி உள்ளோம்”
``துவக்கித்தில் வந்த சவால்கள் என்ன? அதனை எப்படி சமாளித்தீர்கள்?”
``தொடக்கத்தில், வாடிக்கையாளர்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு நாளைக்கு 80க்கும் மேல் அழைப்புகள் செய்து, அதிலிருந்து 2 முதல் 5 பேர் மட்டுமே "Influencer List" கேட்பார்கள். அதிலிருந்து ஒரே ஒரு மாற்று வாடிக்கையாளர் (Conversion) கிடைக்கும். தொடர்ந்து உழைத்த பிறகு, ஒரு நாள் "சீயக்காய்" நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அவர்கள் மிகவும் சவாலான வேலை ஒன்றை கொடுத்தனர்.
2 நாட்களில் 30 Influencers தேர்வு செய்து, அவர்களிடம் வீடியோ எடுக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை. இந்த சவாலினை ஏற்று, குறித்த நேரத்திற்குள் வெற்றிகரமாக முடித்தோம்.”
``இன்ஃப்ளுயன்சர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?”
``நாங்கள் Engagement Rate மற்றும் Sentiment Analysis வழியாகவும் அவர்களை தரவரிசைப்படுத்தி தேர்ந்தெடுக்கிறோம்.
சில நிறுவனங்களின் மென்பொருளைக்கொண்டு போலியான கணக்குகளை கண்டறிகிறோம். எனவே ஏதேனும் கருவி பயன்படுத்தி ஃபேக் விளம்பரம் செய்திருந்தால் அவர்களை ஆரம்பத்திலேயே நீக்கிவிடுகின்றோம்.
தற்போதைய Instagram Algorithm -ல் Followers முக்கியமானது ஆனால் அது மட்டுமே போதாது. வீடியோ பார்வை (Views) ஒரு முக்கியமான அளவுகோல் எனவே, Followers அடிப்படையில் தேர்வு செய்யாமல், அவர்களின் Engagement மற்றும் Reach அடிப்படையில் தேர்வு செய்கிறோம். இப்போது எங்களிடம் 2000+ இன்ஃப்ளுயன்சர்கள் உள்ளனர். இதில், சினிமா நடிகர்கள், நடிகைகள், தொலைக்காட்சி பிரபலங்கள், மேடை பேச்சாளர்கள் ,நகைச்சுவையாளர்கள் (Comedians) உள்ளிட்ட பலர் உள்ளனர்.”
`இந்தத்துறையில் உள்ள சிக்கல் என்ன?’
``இந்தத்துறை இப்போதுதான் வளர்ச்சிடையந்துவருவதால் இப்போதைக்கு சரியான செல்வாக்கு மிக்கவர்களை கண்டறிவததான் மிகப்பெரிய சிக்கல். இதற்கான பல வழிமுறைகளை நாங்கள் ஆராய்ந்து, அதை சரிபடுத்தி சரியான நபர்களுடன் கூட்டணி அமைத்து எங்கள் திட்டப்பணிகளை செயல்படுத்திவருகின்றோம்.” என்கிறார்.
நவீன தொழில்நுட்பங்கள் புதிய புதிய வாய்ப்புகளை உருவாக்கிவருகிறது. புதிய வாய்ப்பகளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் இருக்கிறது நம் எதிர்காலம், அந்த வகையில் புதிய துறையில் புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த நிறுவனத்தை ஆரம்பித்து செயல்பட்டுவரும் அரவிந்த் ஒரு உதாரணம்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play