Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
Sunny Leone: `ரூ.1000 உதவித் தொகை' சன்னி லியோன் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி மோசடி..!
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க அரசு மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தை செயல்படுத்திவருகிறது. தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 கொடுப்பது போல, திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ,1000 கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை நேரடியாக பயனர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த நிலையில், அரசு திட்டத்தின் பயனர் ஒருவரின் பெயர் சன்னி லியோன் என்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், விரேந்திர ஜோஷி என்பவர் இந்தக் கணக்கைத் தொடங்கி, அதன் மூலம் ஒவ்வொரு மாதத்தின் உதவித் தொகையையும் மோசடி செய்துவந்தது தெரியவந்தது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தத் திட்டத்தை தகுதியானவர்களிடம் சேர்க்கும் பொறுப்பு அதிகாரிகளிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பேசிய மாவட்ட ஆட்சியர் எஸ்.ஹரீஸ், ``சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள தலூர் கிராமத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வங்கிக் கணக்கை பறிமுதல் செய்ய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு உத்தரவிட்டிருக்கிறோம்." என்றார்.