செய்திகள் :

Tamil Cinema : `கிடப்பில் இருக்கும் படங்களில் விரைவில் திரைக்கு வருவது எவை எவை?’

post image

'மதகஜராஜா'வின் வெற்றி பல படங்களுக்கு கலங்கரை விளக்கமாக அமைந்துவிட்டது. பல்வேறு சிக்கல்களால் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் படங்களை மீண்டும் வெளிக்கொண்டு வர தீவிர முயற்சிகள் நடந்துவருகின்றன. விக்ரம், பிரபுதேவா, அரவிந்த்சாமி உள்பட சில சீனியர் ஹீரோக்களின் படங்கள் மற்றும் 120 சிறு பட்ஜெட் படங்கள் வெளியிட முடியாமல் முடங்கி கிடக்கின்றன.

இதில் 40 படங்கள் அடுத்தடுத்து வெளிவர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 30 படங்கள் இந்த காலகட்டத்துக்கும் தகுந்தவாறு, ஓடக் கூடிய படங்களாகக் கணிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.

தனஞ்செயன்

குறிப்பாக விக்ரம், கௌதம் மேனனின் கூட்டணியில் உருவான 'துருவ நட்சத்திரம்', வெட்கட் பிரபு இயக்கியுள்ள 'பார்ட்டி', சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்', லிங்குசாமி தயாரிப்பில் உருவான 'இடம் பொருள் ஏவல்...

சி.வி.குமார் தயாரிப்பில் உருவான 'டைட்டானிக் காதலும் கவுந்து போகும்', காஜல் அகர்வால் நடித்த 'பாரீஸ் பாரீஸ்', கார்த்திக் நரேன் இயக்கியுள்ள 'நரகாசூரன்', அருண் விஜய் நடித்த 'பார்டர்', 'வா டீல்'. பிரபுதேவாவின் 'ஃப்ளாஷ்பேக்', 'யங்மங்சங்', 'மைக்கேல் முசாசி' விஜய் ஆண்டனி நடித்த 'அக்னி சிறகுகள்', அரவிந்த்சாமியின் 'சதுரங்க வேட்டை 2', 'வணங்காமுடி', 'கள்ளப்பார்ட்'...

நரகாசூரன்

சரத்குமார், சசிகுமார் இணைந்து நடித்த 'நா நா', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', 'மோகன் தாஸ்', விமல் நடிப்பில் 'ரெண்டாவது படம்', விஜய் சேதுபதியின் 'காந்தி டாக்ஸ்', அமலாபால் நடித்த 'அதோ அந்த பறவைபோல', ஜி.வி.பிரகாஷ் நடித்த 'அடங்காதே', '13', சசி இயக்கிய 'நூறு கோடி வானவில்', ஆண்ட்ரியாவின் 'கா', 'பிசாசு 2' எனப் பல படங்களை அடுத்தடுத்து திரைக்கு கொண்டு வர முயற்சிகள் தீவிரமாக நடக்கின்றன.

'மதகஜராஜா'வின் மிராக்கிள் சக்சஸுக்கு பின், 'துருவநட்சத்திரம்' போல சில படங்கள் உடனடியாக வெளியாகும் என்ற பேச்சு நிலவிய நிலையில், நான்கு மாதங்களுக்கு மேல் ஆகியும், அப்படி கிடப்பில் இருந்த எந்தப் படமும் வெளியாக வில்லை என்பதே உண்மை.

இது குறித்து தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளருமான ஜி. தனஞ்செயனிடம் பேசினோம்.

சர்வர் சுந்தரம்

வரிசை கட்டும் புதிய, பெரிய படங்கள்:

''முன்பே சொன்னது போல பல சங்கங்களும் கலந்து இந்த முயற்சியினை மேற்கொண்டு வருகிறோம். இந்தாண்டில் ரெடியான படங்கள் ரிலீஸுக்கு வரிசை கட்டி நிற்கின்றன. இப்போது சூர்யா சார், சசிகுமார் சாரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அடுத்து 'மாமன்', 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' இரண்டும் வெளியாகிறது.

ஜூன் முதல் வாரத்தில் கமல் சாரின் 'தக் லைஃப்', ஆகஸ்ட்டில் 'கூலி', செப்டம்பரில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' அக்டோபரில் 'சர்தார் 2' என அடுத்தடுத்து பெரியபடங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்கள். இடையே ஜூலை மாதம் மட்டும் தான் பெரிய படங்கள் எதுவும் வெளியாகத சூழல் உள்ளது.

மக்கள் கிட்ட புதுப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் போது, கிடப்பில் இருக்கும் படங்களை விட, புதுப்படங்களை கொண்டு வருவதில் தான் பலரும் முன்னுரிமை கொடுப்பார்கள். இதற்கிடையே 'துருவநட்சத்திர'த்தை விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடக்கிறது.'' என்கிறார் தனஞ்செயன்.

``நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும்'' - கரையானால் நிலைகுலைந்த குடும்பம்; நெகிழ வைத்த லாரன்ஸ்!

ஒரு ஏழைக் குடும்பம் சிட்டுக் குருவி போல பல ஆண்டுகளாகச் சேமித்த ஒரு லட்சம் ரூபாயை ஒரு டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்தது.பின்னர் ஒரு தேவைக்காக அதை எடுத்துப் பார்த்த குடும்பத்தினர், பணம் முழுவதைய... மேலும் பார்க்க

Ajith: 'அவர் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர்' - அஜித் குறித்து நெகிழும் தாமு

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது.நடிகர் ... மேலும் பார்க்க

``அவர் செய்த உதவியை நான் மறந்தா? எனக்கு சாப்பாடு கூட கிடைக்காது..'' - தனுஷ் குறித்து ரோபோ சங்கர்

பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில், ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அம்பி’. இந்த படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, மோக... மேலும் பார்க்க

Robo Shankar: "இனி அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சதுனு சொன்னாங்க; ஆனா..." - ரோபோ சங்கர் உருக்கம்

பாஸ்ஸர் ஜே எல்வின் இயக்கத்தில், ரோபோ சங்கர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘அம்பி’. இந்தப் படத்தில் அஸ்வினி சந்திரசேகர் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, ம... மேலும் பார்க்க

சிவகார்த்திகேயன்: ``அம்மா என்றழைக்காத உயிரில்லையே..'' - அம்மா பிறந்தநாளில் நெகிழ்ந்த சி.கா!

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது தாய் ராஜி தாஸ் பிறந்தநாளில் அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவரது சமூக வலைத்தள பக்கங்களில்,"அடுத்திங்கு பிறப்பொன்றுஅமை... மேலும் பார்க்க

புதிய பாய்ச்சல்; புதிய கோணங்கள் - 2010-க்குப் பிறகான தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகள்

தமிழ் சினிமா இப்போது ரொம்பவும் மாறிவிட்டது. குறிப்பாக, ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு தற்போது திரைப்படங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அதற்கேற்ப படங்களின் கன்டென்ட்களும் மெ... மேலும் பார்க்க