செய்திகள் :

The Satanic Verses: ``அரசாணையை கண்டுபிடிக்க இயலவில்லை" -சல்மான் ருஷ்டி புத்தகத்தின் மீது தடை நீக்கம்

post image

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகமான 'The satanic Verses' மீதான 36 ஆண்டுகால தடையை நீக்கியுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

"தி சாத்தானிக் வெர்சஸ்" என்ற புத்தம் வெளியிடப்பட்டபோது, அது இஸ்லாமிய தூதர் நபிகள் நாயகத்தை மோசமாக சித்தரித்ததாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் (CBIC) 1988ம் ஆண்டே தடை செய்யப்பட்டது.

நீதி மன்றம்

நீதிமன்றத்தில் அக்டோபர் 5, 1988 தேதியிட்ட அரசாணையை சிபிஐ ஒப்படைக்கத் தவறியதால், அது 'கண்டுபிடிக்க முடியாதது' என அறிவிக்கப்பட்டது.

சல்மான் ருஷ்டி 1947ம் ஆணடு இந்தியாவில் பிறந்த ஒரு பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளர். 'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் 1988ம் ஆண்டில் லண்டனில் வெளியிடப்பட்டது. இவர் Clarissa Luard, Marianne Wiggins,  Midnight's Children போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

2019ம் ஆண்டு சந்தீபன் கான் என்ற நபர் சல்மான் ருஷ்டியின் புத்தத்தை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய கோரிக்கை வைத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கஸ்டம்ஸ் சட்டம், 1962-ன் படி, இந்தியாவில் சாத்தானின் வசனங்கள் புத்தகத்தை இறக்குமதி செய்ய தடை விதித்த அறிவிப்பு அரசியலமைப்புக்கு எதிரானது, அதனை நீக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் வாதிட்டார் கான்.

சல்மான் ருஷ்டி

கான் ஒரு புத்தக விரும்பியாக இருந்துள்ளார். அவர் புத்தகக் கடைகளில் அதிகாரப்பூர்வமான சாத்தானிய வாசனங்கள் புத்தகம் கிடைக்காததால் அதனை தடை செய்யும் அரசாணையை இணையத்தில் தேடியுள்ளார். ஆனால் அப்படி எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை.

நவம்பர் 5-ம் தேதி நீதிமன்றத்தில் இந்திய அரசு, "The Satanic Verses புத்தகத்தை தடை செய்யும் அரசாணையை கண்டிபிடிக்க முடியாததால், நீதிமன்றத்தில் சமர்பிக்க இயலவில்லை" என்று கூறியிருக்கிறது.

இதனால், "அப்படி ஒரு ஆணை வெளியாகவில்லை என்று எடுத்துக்கொள்வதை விட நீதிமன்றத்துக்கு வேறு வழியில்லை" என நீதிமன்றம் அறிவித்தது. இதனால் அந்த புத்தகத்தின் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

"சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை தடை செய்யும் அரசாணை இல்லாததால் தடை நீக்கப்பட்டது" என்று சந்தீபன் கானின் வழக்கறிஞர் உதயம் முகர்ஜி நவம்பர் 5ம் தேதி தெரிவித்துள்ளார்.

தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் வெளியானபோது உலகம் முழுவதும் பெரும் ஆர்பாட்டங்கள் வெடித்தன. பல இஸ்லாமிய நாடுகளில் அந்தப் புத்தகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய இஸ்லாமிய மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்தியாவிலும் ஆர்பாட்டங்கள் எழுந்தன.

1989ம் ஆண்டு ஈரான் சுப்ரீம் லீடர் அயதொல்லா ருஹொல்லா கோமேனி, சல்மான் ருஷ்டியை கொலை செய்ய மத ஆணை பிறப்பித்ததனால் 6 ஆண்டுகள் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆகஸ்ட் 2022, மத ஆணை வெளியாகி 33 ஆண்டுகளுக்குப் பிறகு நியூ யார்கில் ஒரு மேடையில் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்டார். இதனால் அவர் ஒரு பக்கம் பார்வை இழந்ததுடன், ஒரு கை பயன்பாடும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`EPS- VIJAY- ANBUMANI' புது கூட்டணி... மெகா பிளான்?! சீக்ரெட் மூவ்! | Elangovan Explains

இன்றைய இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,விஜயிடம் நெருங்கும் பா.ம.க? அன்புமணியின் அரசியல் கணக்கு! விஜய்-ன் 5 தோட்டாக்கள்... பொங்கல் பிளான்! எடப்பாடியின் 10 பேர் படை... வெற்றிக்கொடி நாட்டுவார்களா?! அவற்றை முழு... மேலும் பார்க்க

திருநெல்வேலி: கட்டுமான பணிகள் முடிந்தும் திறக்கப்படாத நியாய விலைக்கடை... மக்கள் அதிருப்தி!

திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்துக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து தான் அப்பகுதியின் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது.அண்ணாநகர், பெரியார் நகர், இந்திரா ... மேலும் பார்க்க

மதுரை: மக்களை ஈர்க்கும் வேளாண் சுற்றுலா... கூத்து, கொண்டாட்டத்துடன் பிரபலமாக்கும் சுற்றுலாத்துறை!

ஆன்மிக சுற்றுலா, பசுமை சுற்றுலா, வரலாற்று தொல்லியல் சுற்றுலா, உணவு சுற்றுலா வரிசையில் தற்போது வேளாண் சுற்றுலா மதுரையில் பிரபலமாகி வருகிறது.வேளாண் சுற்றுலாஅக்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாட்டின் அரசி... மேலும் பார்க்க

UP: ``பெண்களுக்கு ஆண்கள் அளவெடுக்கக் கூடாது; ஜிம்மிலும் No Male Trainers'' -மகளிர் ஆணையம் பரிந்துரை!

உத்தரபிரதேச மகளிர் ஆணையம் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி சில தீவிர நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.ஆண் தையல்காரர்கள் பெண்களுக்கு அளவெடுக்கக் கூடாது, ஆண் பயிற்சியாளர்கள் ஜிம் மற்றும் யோகா மையம் போன்ற... மேலும் பார்க்க

Kamala Harris தோல்விக்கான 8 முக்கிய காரணங்கள் | US Election 2024 | Donald Trump

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலாஹரிசை வீழ்த்தி டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதில் கமலா ஹரிஸ் தோல்விக்கான 8 காரணங்... மேலும் பார்க்க

Vivek Ramaswamy: ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி?

Vivek Ramaswamy: அமெரிக்க அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பேசப்பட்டு வந்த நபர் விவேக் ராமசாமி. குடியரசு கட்சியின் வளர்ந்துவரும் அரசியல்வாதியான இவர் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் கூட பங்கேற்றா... மேலும் பார்க்க