Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
TN Rains: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை மையம் அறிக்கை
நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது.
நேற்று காலையும் மழை பெய்தது. ஆனால், காலை 10 மணிக்கு முன்பே, வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழைநீரும் தேங்கியுள்ளது.
எங்கு மழை பெய்யும்?
இந்த மழை இன்னும் எவ்வளவு மணிநேரம் நீடிக்கும் என்பதை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
"இன்று காலை 10 மணி வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்".
எச்சரிக்கை
மேலும், வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிகையில், `தண்ணீர் தேங்கும், சாலைகள் வழுக்கும், சில இடங்கள் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்' எனவே மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளது.