சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
TNPSC 2025 Annual Planner: குரூப் 1 டு குரூப் 5; எந்தெந்த மாதத்தில் எந்தெந்த தேர்வுகள்? முழு விவரம்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
லட்சக்கணக்கானோர் இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனர். தேர்வர்களின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.சி நிர்வாகம் தேர்வுகளின் ஆண்டு திட்டத்தை முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் 10.10.2024 அன்று டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது.
அதன்படி, இந்தாண்டு குரூப் 1, 2 மற்றும் 2ஏ, குரூப் 4 உட்பட மொத்தம் 7 போட்டித் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
தேர்விற்கான அறிவிப்பு வெளியாகும்போதுதான், காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது.
சமீபத்தில் குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதில் மொத்தம் 72 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில் குரூப் 1 பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருடாந்திர ஆண்டுத் திட்டத்தின்படி நடப்பாண்டில் என்னென்னத் தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நடத்தவிருக்கிறது என்பதைப் பற்றிய முழு விவரம் இங்கே...
* குரூப் 4 தேர்வு 2025 ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.
* குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பு ஜூலை 15 ஆம் தேதி வெளியாகிறது.
* ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2025 ஜூலை 21 ஆம் தேதி முதல் தொடங்கும். இந்த தேர்வுக்கான அறிவிப்பு மே 7ஆம் தேதி வெளியாகும்.

* ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அறிவிப்பு 2025 மே 21 ஆம் தேதி வெளியாகும். தேர்வுகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் தொடங்கும்.
* ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (பட்டயம்/ தொழிற்பயிற்சி தரம்) அறிவிப்பு 2025 ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும். தேர்வுகள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் தொடங்கும்.
* குரூப் 5ஏ தேர்வு 2025 டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும். குரூப் 5ஏ தேர்வு குறித்த அறிவிப்பு 2025 அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும்.
தேர்வர்கள் இதற்கேற்றவாறு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டு திட்டத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வர்களின் முன்கூட்டியே தயாராகிக் கொள்ளும் வகையிலேயே வருடாந்திரத் திட்டத்தை வெளியிடுகின்றனர்.

இதைப் பயன்படுத்தி தேர்வர்கள் திட்டமிட்டுப் படித்து மாதிரித் தேர்வுகளை எடுத்துக் கொண்டு முழுமையான முன் தயாரிப்புடன் தேர்வுக்குத் தயாராகிக்கொள்ளுங்கள் .
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY