செய்திகள் :

Top 10 உலக பணக்காரர்கள்-2025: மஸ்க் முதல் மார்க் வரை... யார் எந்த இடத்தில் உள்ளனர்?

post image

உலக தொழில்திபர்களும் முதலீட்டாளர்களும் தொழில்முனைவோரும் கடந்த சில ஆண்டுகளில் தங்கள் செல்வத்தை மிகப் பெரிய அளவில் உயர்த்தியிருக்கின்றனர். புதிய உருவாக்கங்கள், யுத்திகள் மற்றும் தொலைநோக்கு பார்வை மூலம் தங்களது Net Worth-ஐ (நிகர மதிப்பு) உயர்த்தியிருக்கின்றனர்.

உலகின் டாப் 500 பணக்காரர்கள் குறிப்பிடத்தக்க இலக்குகளை அடைந்துள்ளனர். நாம் அனைவரும் அறிந்த எலான் மஸ்க், மார்க் சக்கர்பெர்க், ஜென்சன் ஹுவாங் இணைந்து 10 ட்ரில்லியன் மதிப்புக்கு செல்வத்தை அடைந்துள்ளனர். இவர்களது எழுச்சிக்கு காரணம் அமெரிக்காவின் பங்குச் சந்தையில் தொழில்நுட்ப பங்குகளின் மதிப்பு உயர்ந்ததுதான் எனக் கூறப்படுகிறது.

America

மற்ற தொழில்நுட்ப பிசினஸ் ஜாம்போவான்களான லாரி எல்லிஸன், ஜெஃப் பெசோஸ், மைக்கேல் டெல், கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரின் சொத்துமதிப்பும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மேலே சொல்லப்பட்ட இந்த 8 தொழில்நுட்ப முதலாளிகள் மட்டுமே டாப் பணக்காரர்களின் செல்வத்தில் அதிகரித்த 1.5 ட்ரில்லியனில் 600 பில்லியன் டாலர்கலைப் பெற்றுள்ளனர் என ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீடு கூறுகின்றது.

மேலும் ஃபோர்ப்ஸ் கூறுவதன்படி, அமெரிக்கா மட்டுமே 813 பில்லியனர்களுடன் அதிக பெரும் பணக்காரர்களைக் கொண்ட நாடாக உள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்துள்ள சீனாவில் 473 பில்லியனர்கள் உள்ளனர்.

இந்தியா 200 பில்லியனர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் எலான் மஸ்க்

2025 தொடக்கத்திலேயே அவரது செல்வச்செழிப்பின் உச்சத்தில் இருக்கிறார் எலான் மஸ்க். உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான இவரது சொத்து மதிப்பு 433.9 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரலாற்றிலேயே 400 பில்லியன் டாலர் சொத்துமதிப்பை எட்டிய நபர் என்ற சாதனையைப் படைத்தார் எலான் மஸ்க். இவரது முதன்மை நிறுவனங்களில் ஒன்றான ஸ்பேஸ் எக்ஸின் மதிப்பு 350 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Elon Musk

கடந்த டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகே அவரது சொத்து மதிப்பில் 91 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது ஸ்பேஸ் எக்ஸ் உலகிலேயே மதிப்புமிக்க தனியார் நிறுவனமாக உயர்ந்தது.

ஸ்பேஸ் எக்ஸுடன் மின்சார வாகனம் தயாரிக்கும் டெஸ்லா, சமூக வலைத்தளமான எக்ஸ், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ் ஏஐ, சுரங்க நிறுவனமான போரிங் கம்பனி, ஸ்டார்லின்க், நியூராலின்க் ஆகிய நிறுவனங்களை வைத்துள்ளார் எலான் மஸ்க்.

மூன்றாம் இடம் பிடித்த மார்க் சக்கர்பெர்க்

மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ஒராக்கல் நிறுவனத்தின் நிறுவனர் லாரி எல்லிசனை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பணக்கார நபராக முன்னேறியுள்ளார். மார்க்கின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டை விட 4% அதிகரித்து 204.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.

என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேசன் ஹுவாங், 118 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முதன்முறையாக டாப் 10 பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளார்.

Mark Zuckerberg

டாப் 10 பணக்காரர்கள்

1. எலான் மஸ்க், USA ($443.9 B - Tesla, Space X)

2. ஜெஃப் பெசோஸ், USA ($239.4 B - Amazon)

3. மார்க் சக்கர்பெர்க், USA ($211.8 B - Facebook)

4. லாரி எல்லிசன், USA ($204.6 B - Oracle)

5. பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் France ($181.3 B - LVMH)

6. லாரி பேஜ் USA ($161 B - Google)

7. செர்ஜி ப்ரின் USA ($154.0 B - Google)

8. வாரன் பஃபெட் USA ($146.2 B - Berkshire Hathaway)

9. ஸ்டீவ் பால்மெர் USA ($126.0 B - Microsoft)

10. ஜென்சன் ஹுவாங் USA ($120.2 B - NVIDIA)

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

StartUp: தொழில் முனைவோர் வெற்றிக்கு வழிகாட்டும் JCOM; மதுரையில் ஒரு நாள் நிகழ்ச்சி.. என்ன ஸ்பெஷல்?

தொழில்துறையில் சாதித்தவர்கள், சாதிக்க உள்ளவர்களை ஒன்றிணைத்து தொழில் வளர்ச்சிக்கு பங்காற்றி வரும் JCOM (Jaycees chamber of commerce) தொழில்துறையினர், ஆலோசகர்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ளும் ப... மேலும் பார்க்க

Google: ``வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்யுங்கள்.." - இணை நிறுவனர் செர்ஜி பிரின் சொல்வதென்ன?

ஊழியர்கள் வாரத்துக்கு 60 மணி நேரம் வேலைசெய்ய வேண்டும் என்றும் வாரநாள்களில் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் தெரிவித்திருக்கிறார். 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ChatG... மேலும் பார்க்க

Volkswagen: ``97% இறக்குமதி, $ 1.4 பில்லியன் வரி ஏய்ப்பு..'' -சுங்க வரித்துறை கிடுக்கிப்பிடி விசாரணை

இந்தியாவில் வோக்ஸ்வாகன் கார் நிறுவனம் புனே மற்றும் ஒளரங்காபாத்தில் கார்களை தயாரித்து வருகிறது. இந்த கார்கள் தயாரிக்க வோக்ஸ்வாகன் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ஒட்டுமொத்த உதிரி பாகங்களையும் இறக்குமதி ... மேலும் பார்க்க

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2024: பிசினஸ் சாதனையாளர்கள் சொன்ன வெற்றிச் சூத்திரங்கள்..!

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருது 2024 நிகழ்வு பிப்ரவரி 7-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன், தொழிலதிபர்கள் உள்பட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர... மேலும் பார்க்க