செய்திகள் :

Travel Contest: இதான் எங்க Bali சுற்றுலா Tour Plan... உலகின் அழகான தீவில் அட்டகாச அனுபவம்!

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் அமைந்துள்ளதுதான் 'பாலி'. கவர்ச்சியான தீவுகளில் ஒன்று 'கடவுளின் தீவு'.

ஐந்து நாள்கள் சுற்றுலாப் பயணமாக அண்மையில் பாலிக்குச் சென்று வந்தோம். குடும்பமாக 8 பேர் போனோம். மற்ற வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதைக் காட்டிலும் இங்குச் செல்வது செலவு குறைவுதான்.

பசுமையான காடுகள், பழமையான கோயில்கள், நீர்வீழ்ச்சிகள், பனிமூட்டமான காலை, நீல வானம் அழகழகாய் குன்றுகள், பசுமை மாறா நெல் வயல்கள், சுறுசுறுப்பான எரிமலைகள், அழகிய மணல் கலந்த வெள்ளை கடற்கரைகள், சூரிய அஸ்தமனம்... கடவுளின் அற்புதமான படைப்பு இந்தோனேசியாவில் அமைந்துள்ள பாலி. உலகின் மிக அழகிய இடங்களில் ஒன்று பாலி.

நாங்கள் தனியார் ஏஜென்சி மூலம் பயணத்தைத் திட்டமிட்டு இருந்தோம்.

சென்னையிலிருந்து பாங்காக் அங்கிருந்து பாலி...

Grand Ixora kuta Resort தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'குட்டா' பீச் ஹோட்டலில் இருந்து ஐந்து நிமிடம்.

எங்கள் பாலி பயணம் குட்டாவில் இருந்து தொடங்கியது. முன்பு கிராமமாக இருந்த குட்டா இப்போது பாலியின் சுற்றளவிற்குப் பெரும் பங்களிப்பைத் தருகிறது என்றார்கள். கடற்கரையில் நடை பயிற்சி கவிதை. அதிகாலை நடை பயிற்சிக்கு ஏற்ற இடம் .

Nusa Dua Beach

இரண்டாம் நாள் நான்கு இடங்களுக்குச் சென்று வந்தோம்.

1. Nusa Dua Beach :

ஒரு குட்டி படகில் நம்மை அழைத்துச் சென்றார்கள். அங்கு ஆமைக்குட்டி முதல் பெரிய ஆமை வரை... விதவிதமான அரிய வகை பறவைகள் மிகப்பெரிய ஓணான், மலைப்பாம்பு என ஏராளம் அவற்றோடு நாம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

2. Padang Padang Beach

பீச்சுக்குப் போகும் வழியே பாறைகளைக் குடைந்து அதில் படிக்கட்டுகள் என இயற்கை அழகு கொஞ்சுகிறது. வழுக்கும் மேற்பரப்பு காரணமாக இருட்டாகவும் பாதுகாப்பாற்றதாகவும் இருப்பதால் மாலை 4 மணி வரை மட்டும்தான் இதற்கு உள்ளே அனுமதிக்கிறார்கள்.

எங்குத் திரும்பினாலும் வெளிநாட்டவர் சன்பாத் எடுக்கிறார்கள். கவலையே படுவதில்லை ஜோடி ஜோடியாக மகிழ்வாக சுற்றுகிறார்கள்.

ரீல்ஸ் செய்வதற்கு ஏற்ற இடம். அதிக ஆழமில்லை.

Padang Padang

3.GWK கல்ச்சுரல் பார்க்..

புகைப்படம் எடுப்பதற்கு என்றே அழகழகாய் நிறைய இடத்தை வடிவமைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய கருடா statue கம்பீரமாய் இருக்கிறது.

இடத்தை விட்டு வர மனசே வரவில்லை அங்கே அமைதியாக உட்கார்ந்து விடலாம் என்பது போல் தோன்றியது. எங்குத் திரும்பினாலும் பச்சை பசேலென்று ஒரு அமைதியான அழகு.

4. Uluwatu cliff Temple :

இங்குள்ள கோயில்கள் எல்லாமே ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாம். ஆன்மீக கலாச்சாரத்தை முழு மனதாகப் பின்பற்றுகிறார்கள் இம்மக்கள்.

இந்தியாவில் பார்க்கும் கோவில்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இவை இருக்கின்றன.

ஆலய கட்டுப்பாடு அதிகம். உள்ளூர் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள். கோயில்கள் அனைத்துமே பாரம்பரிய நடன நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்றவை ஆக இருக்கின்றன.

பாலி கோவில்களின் ஆன்மீக அனுபவம் உலகில் வேறு எந்த பகுதிகளிலும் கிடைக்காது என்றே சொல்லலாம்.

பாரம்பரிய உடை அணிந்து தான் செல்ல வேண்டும் பெரும்பாலான கோயில்களுக்கு. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.

பாலிமக்களுக்கு மட்டுமே அனுமதி. தோள்பட்டை மற்றும் மேல் கைகளை மறைக்கும் சட்டைகளை அணிய வேண்டியது அவசியம். (சரோங், செலெண்டாங்) இடுப்பை மறைக்கும் ஒரு துணி அவசியம் அணிய வேண்டும்.

இந்தக் கோயிலில் சூரிய அஸ்தமனத்தில் 'Kecak' நடன நிகழ்ச்சி நடக்கிறது. திறந்தவெளி அரைவட்ட அரங்கில் ராமாயண நாட்டிய நாடகம் (கெசக்) பார்த்தோம். மத குரு ஒருவர் தீபமேற்ற... நாடகம் துவங்குகிறது.

சீதையை ராவணன் இலங்கைக்குக் கடத்தி செல்லும் காட்சி, அனுமன் சீதையைக் காணும் காட்சி, அனுமன் வாலில் தீ வைக்கும் காட்சி பிரமிக்க வைக்கிறது... ராமன் சீதையை மீட்பது.. என மொத்தமே நான்கு காட்சிகள்தான்..

நடு நடுவே ராவணனின் வேலையாள் பாலி மொழியில் இருந்து மாறி பார்வையாளர்களுடன் பல மொழிகளில் தொடர்பு கொள்கிறார். சிரிப்பு வருகிறது.

சீதை ராம லக்ஷ்மணன் என வேடமேற்பவர்கள் அனைவரும் பெண்கள். (சுற்றி இருக்கும் ஆண்கள் வாயிலேயே அருமையாக இசைக்கிறார்கள்) கண்கொள்ளாக் காட்சி அவசியம் பார்க்க வேண்டிய ஒரு நாட்டிய நிகழ்வு.

மூன்றாம் நாள்: West Nusa Penida Island பயணம்..

போகும் வழியில் broken beach, diamond beach, Angel beach, keling beach... எல்லாவற்றிலும் அழகான இயற்கை காட்சிகளை நின்று படம் எடுத்துக் கொண்டோம்.

எல்லா பீச்சிலும் ஆசை தீரக் குளிக்கலாம். வியூ பாயிண்ட்ஸ் ஒவ்வொன்றும் அழகோ அழகு.

புகழ் பெற்ற பாலி ஊஞ்சல்... எல்லாவற்றிலும் தனியாக ஆடலாம். துணையுடன் ஆடலாம். கவலைகளை மறந்து ஆடலாம். அருமையான எக்ஸ்பீரியன்ஸ்.

இரவு. ஃபுல் மூன் விலா Ubud வந்தடைந்தோம்.

அருமையான villa.. ஒவ்வொரு அறையிலும் தனிப்பட்ட முறையில் நீச்சல் குளம்.. சூரியன் மெதுவாக ஜன்னல் வழியாக நேராக வில்லாவுக்குள் எட்டிப் பார்க்கிறது... கவிதை எழுதத் தெரியாதவர்களுக்கும் கவிதை எழுத வரும்...

Nusa Penida

நான்காம் நாள்

1.TanahLot... கோயில் தண்ணீரைக் கடந்தபடியே கோயிலுக்குச் செல்லுதல்.. அங்கங்கே அழகழகாய் புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற குருவிக்கூடு, இதய வடிவிலான இடம் இப்படி நிறைய.

2. Bali Handara Gate அருமையான இயற்கை எழில்கொஞ்சும் வியூ பாயிண்ட்.. தேனிலவுக்கு வந்த தம்பதிகள் பலரும் அழகழகாய் போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தனியே கட்டணம்.

3. UlunDanu Temple அழகழகாய் பல இடங்கள் விதவிதமாய் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள...

ஐந்தாம் நாள்

1. Kintamani volcano

எரிமலையிலிருந்து எரிமலை மற்றும் சாம்பல் வெளியேறுவதைப் பாதுகாப்பான தூரத்திலிருந்து பார்த்தோம். இதுவரை பாடப் புத்தகங்களில் மட்டுமே படித்திருந்ததை நேரில் பார்த்த போது மனம் நெகிழ்ந்தது.

2. Tegenungan water fall: இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் கண்டிப்பாகச் சொர்க்கத்தைக் காணலாம். இந்த நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையே கவிதை போல் இருக்கிறது.

சுத்தமான காற்று நாசியைத் தீண்டுகிறது. நீர்வீழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இங்கும் பாலி ஊஞ்சல் இருக்கிறது.

இன்றும் நிறைய ரீல்ஸ் செய்யலாம். நீர் அதிக ஆழமில்லை.

3. Tegallalang மாடி நெல் வயல்கள்

பார்ப்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இங்கும் Bali Swing உள்ளது. மூங்கில் வேயப்பட்ட அழகழகான குருவிக்கூடுகள் நிறைய உள்ளன. புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏதுவானது.

4. Goa Gajah:

குகைகளில் பிள்ளையாரும் சிவனும் காட்சியளிக்கிறார்கள். நாம் அரிசி மாவில் கொழுக்கட்டை செய்வது போல் இங்குள்ள பெண்கள் அரிசி மாவில் குட்டி குட்டியாய் அழகாய் பூக்களைச்செய்து எண்ணெய்யில் பொறித்து நைவேத்தியமாக இறைவனுக்குப் படைக்கிறார்கள்.

அது ஒரு பெரிய ப்ராசஸாக நடக்கிறது. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. (நானும் செய்வதற்குக் கற்றுக் கொண்டேன்)

5. Coffee plantation

மிகப்பெரிய காபி தோட்டம். இங்கு வளரும் காபி பெர்ரிகளை புனுகு பூனை வகையைச் சார்ந்த மர நாய்கன் சாப்பிட்டு அதனுடைய கழிவுகள் கொட்டைகளாக வெளியே வர அவற்றைச் சுடுநீரில் நன்கு கழுவி தோலை உரித்து, வாணலியில் வறுத்து உரலில் போட்டுப் பொடி செய்கிறார்கள். துவர்ப்பு கலந்த சுவையாக இருக்கிறது இந்த காஃபி .

நம் இந்திய மதிப்பில் ஒரு கப் காபி 300 ரூபாய். பெரும்பாலும் இந்த காபித்தூள் ரஷ்யாவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறதாம்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா' கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு - `சுற்றுலா'. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அரிசி உணவுகள், லட்சங்களில் பில்..!

உணவகங்களில் பெரும்பாலும் அரிசி உணவுகள் கிடைக்கின்றன. இறைச்சி வகைகளில் கோழி ,மீன், பன்றி இறைச்சி கிடைக்கின்றன.

சாப்பாடு ஒன்றும் பெரிய கஷ்டமாக இல்லை. நிறைய இந்தியன் ரெஸ்டாரண்டுகள் உள்ளன. அங்கு சப்பாத்தி பூரி ருமாலியன் ரொட்டி, சைட் டிஷ் , புலாவ் ஃபிரைட் ரைஸ் எல்லாம் நன்கு கிடைக்கிறது.

இங்குச் சாப்பிடும்போதுதான் நாம் பெரிய பணக்காரர்கள் என்ற உணர்வு வருகிறது. காரணம் பில்.. லட்ச ரூபாயில் வருகிறது. நான்கைந்து பேர் ஒரு வேளை சாப்பிட பில் குறைந்தது எட்டு லட்ச ரூபாய் வருகிறது. அது ஆனால் இந்திய மதிப்பில் சுமார் நான்காயிரம் ரூபாய் தான்.)

பெரும்பாலான உணவகங்களில் பெண்கள் இசைக்கேற்ப நடனம் ஆடுகின்றனர்.

கிருஷ்ணா ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை உள்ளது. இங்கு எல்லா விதமான பொருட்களும் கிடைக்கின்றன. நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இங்கே ஒரே இடத்திலேயே வாங்கிக் கொள்ளலாம்.

மொத்தத்தில் ஐந்து நாள் சுற்றுலா பயணம் ஐந்து நிமிடமாக கரைந்தே போனது.

பி.கு.. சொல்ல மறந்தேனே.. கண்டிப்பாக விமானம் தரை இறங்கியவுடனும், பயணம் முடியும் தருவாயிலும்... அரோமா மசாஜ்... அதிலும் குறிப்பாக ஃபுட் மசாஜ்... செய்து கொள்ளுங்கள். புத்துணர்வு பெறுவீர்கள்.

பாலி சுற்றுலாப் பயணிகளைப் பெருமளவில் ஈர்ப்பதற்கு காரணம் அதன் இயற்கை வனப்பு மற்றும் கடற்கரைகள் . கனவுத்தீவான பாலிக்கு வாழ்க்கையில் ஒரு முறை கண்டிப்பாக செல்ல வேண்டுமென திட்டமிடுங்கள்..

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Travel Contest: "வண்டிய நிறுத்துங்க; பயப்படாதீங்க’’ - பதைபதைக்க வைத்த பரம்பிக்குளம் சுற்றுலா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Indian Railways: பயணிகளுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் ரயில் - எங்கு தெரியுமா?

ரயில் போக்குவரத்து பெரும்பாலான மக்கள் விரும்பும் ஒரு பொதுப் போக்குவரத்து ஆக உள்ளது. வசதியாவும், குறைந்த கட்டணத்திலும் இருப்பதால் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக இந்த ரயில் போக்குவரத்து உள்ளது. பொதுவாக ... மேலும் பார்க்க

Travel Contest: பீகாரின் வறட்சி; புத்தரின் அமைதி; காசியின் நெரிசல்; வட இந்திய பயணம் எப்படி இருந்தது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி அரசு பேருந்துகளில் இனி G Pay மூலம் டிக்கெட் பெறலாம்.. பயணிகள் குஷி!

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் இனி ஜி.பே., போன் பே போன்ற யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மூலம் டிக்கெட் எடுக்கும் புதிய வசதியை அரசு போக்குவரத்து திருநெல்வேலி கிளை அறிம... மேலும் பார்க்க

Travel Contest: புதைக்கப்பட்ட டெரகோட்டா ராணுவம் பற்றித் தெரியுமா? பிரமிக்க வைத்த சீனா சுற்றுலா!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Travel Contest: ஃபூஜி எரிமலையின் குளிர்ச்சி; ஹிரோஷிமாவின் அமைதி; ஜப்பான் எப்படி இருக்கிறது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க