செய்திகள் :

TV Update : இந்தாண்டு `Top Cooku Dupe Cooku' இருக்கா? - Media Masons சொல்வது என்ன?

post image

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த 'வள்ளியின் வேலன்' தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த 'திருமணம்' தொடரில் ஜோடியாக நடித்தவர்கள் சித்து - ஸ்ரேயா. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இருவருக்குமிடையில் காதல் மலர, நிஜ வாழ்க்கையிலும் இணைந்தனர்.

திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடியை மீண்டும் 'வள்ளியின் வேலன்' தொடரில் ஜோடியாக்கியது ஜீ தமிழ். 'திருமணம்' தொடரில் நடித்த போது சித்து - ஸ்ரேயா ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி அந்த தொடருமே நல்ல வரவேற்பை பெற்றதால், 'வள்ளியின் வேலன்' தொடரும் அதே போல் ஹிட் ஆகும் என எதிர்பார்த்தது சேனல்.

சித்து - ஸ்ரேயா

ஆனால் என்ன காரணமோ 'வள்ளியின் வேலனில் அடுத்தடுத்த சில மாற்றங்கள் நடந்தன. ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்த சாக்‌ஷி சிவா முதலில் மாறினார். பிறகு  கொஞ்ச நாளில் தொடரின் இயக்குனரே மாறியதும் நடந்தது.

இந்தச் சூழலில் தற்போது தொடர் முடிவடைந்து விட்டதாகத் தெரிய வருகிறது.

கடந்த வாரம் தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் நடக்க, அன்று சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் ரொம்பவே எமோஷனலாக இருந்தார்களாம்.

நிறைவடையும் இந்த தொடர் ஒளிபரப்பான நேரத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லை. இப்போதைக்கு அடுத்தடுத்த ஸ்லாட்டுகளில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சீரியல்களின் நேரத்தை தலா பதினைந்து நிமிடங்கள் அதிகரித்திருக்கிறார்களாம்.

விஜய் டிவியில் `குக்கு வித் கோமாளி’ சீசன் 6 தொடங்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் விஜய் டிவியுடன் மல்லுக்கட்டிய லட்சுமி ராமகிருஷ்ணன், ராமர், பிக்பாஸில் பரபரப்பை உண்டாக்கி அதிரடியாக வெளியேற்றப்பட்ட நடிகை மதுமிதா ஆகியோர் களம் இறங்கியிருக்கும் சூழலில், வெளியான இரண்டு வார நிலவரப்படி, நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவே  சொல்கிறார்கள்.

வெங்கடேஷ் பட்-க்குப் பதிலாக இறக்கப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜ் போதாதென்று இந்தாண்டு மேலும் ஒரு ஜட்ஜை கூட்டி வந்திருக்கிறார்கள்.

அதேநேரம் இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியின் புரமோ கூட இதுவரை வெளியாகவில்லை.

கடந்தாண்டு மே மாதத்தில் அந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கி விட்ட நிலையில், இந்தாண்டு இன்னும் புரொமோ கூட வெளியாகததால், நிகழ்ச்சி இருக்கிறதா இல்லையா என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் பேச்சுகள் உலாவத் தொடங்கி விட்டன.

குக்கு வித் கோமாளி சீசன் 6

'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேசன் நிறுவனமே இந்த நிகழ்ச்சியையும் தயாரிக்கிறது. முதல் சீசனே ஹிட்டுதான். அதனால நிச்சயம் இந்தாண்டும் நிகழ்ச்சி இருக்கு. லேட்டா வந்தாலும் வெயிட்டா இறக்குவாங்க'  என்கிறார்கள்.

சந்தேகத்தைத் தீர்க்கலாமென மீடியா மேசனின் ரவூஃபாவிடமே பேசினோம்.

''இப்ப 'நானும் ரௌடிதான்' நிகழ்ச்சி போயிட்டிருக்கு. அது முடிவடைஞ்சதும் 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சி நிச்சயம் இருக்கு. போன வருஷம் மே மாசம் தொடங்குச்சுதான். ஆனா இந்த வருஷம் கொஞ்சம் தாமதமா வரும். நாம யாரையும் போட்டியா நினைக்கிறதில்லை. அதனால வர வேண்டிய நேரத்துல ஷோ கண்டிப்பா வரும். சொல்லப் போனா முதல் சீசனை விடவும் தரமாவே வரும். வருஷத்துக்கு வருஷம் டெவலப்மென்ட் இருக்க்கணுமில்லையா...' என்கிறார் உற்சாகமாக.

Anusree: "திருநர் சமூகத்தைக் கேலிச் சித்திரமாகவே படங்களில் காட்டுகிறார்கள்" - திருநங்கை அனுஶ்ரீ

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவுக்கு வருகை தந்து, தற்போது சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி இருக்கிறார் திருநங்கை அனுஶ்ரீ. அனுஶ்ரீ இதற்கு முன்பே 'லவ் வித் டிரான்ஸ்ஜென்டர்' என்ற யூடியூப் வெப் சீரிஸில் ந... மேலும் பார்க்க

Anusree: "வலிகளால் நிறைந்ததுதான் என் சிரிப்பு!" - வைரல் திருநங்கை அனுஶ்ரீயின் க்ளிக்ஸ் | Photo Album

வீடியோ பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.Nambikkai Awards: 'ரயிலில் சீட்கூட தர மாட்டார்கள்; இன்று அதிகாரி’- தடையுடைத்த திருநங்கை சிந்து கணபதிJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...... மேலும் பார்க்க

"சங்கவி இன்னும் உயிரோட தான் இருக்கா..!"- `கனா காணும் காலங்கள்' மோனிஷா

சீரியல்கள் என்றாலே குடும்ப சண்டை, அழுகை, சோகம் என்ற பிராண்டிங்கிள் இருந்து ஃபன் மற்றும் ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸின் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக 'கனா காணும் காலங்கள்' சீரியல் அறிமுகம் ஆகியது. 'கன... மேலும் பார்க்க

`அந்த தம்பிய திரும்ப மீட் பண்ணினேன்; அப்போ, சொன்னான்..!’ - Neeya Naana வீரசெல்வி பேட்டி

ஒரு மனிதனுக்குள் இருக்கும் சாதிவெறி என்பது, தீயை விட ஆபத்தானது. அது, எத்தனை பேரை தீக்கிரையாக்கும் என்பதே தெரியாது. ஆனால், அந்த சாதியத் தீயை 'நீயா நானா?'வில் தனது அறிவார்ந்த விவாதத்தால் ஊதி அணைத்து, ‘இ... மேலும் பார்க்க

"அம்மா கேரக்டருக்கு ஏன் ஹீரோயின் மாதிரி இருக்கணும்னு கேட்குறீங்க?" - 'சின்ன மருமகள்' கெளரி ஜானு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சின்ன மருமகள்'. இந்தத் தொடரில் மோகனா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் கெளரி ஜானு. இவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.`சின்ன மருமகள்'... மேலும் பார்க்க