செய்திகள் :

TVK Vijay: தவெக உறுப்பினர்கள் சேர்க்கை; இணைந்த மூதாட்டிகள்... வரவேற்ற இளம் நிர்வாகிகள்!

post image

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி நகர, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக சாத்தூர் நகரம், ஒன்றியம், வெம்பக்கோட்டை ஒன்றியம், ராஜபாளையம் ஒன்றியம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்திருந்தனர்.

சாத்தூரில் தவெக நிகழ்ச்சி

கூட்டத்தில், கட்சிக் கொள்கை, தேர்தல் இலக்கு, உறுப்பினர் சேர்க்கை, வெற்றிக்கான வழி, பிரசாரம் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து, நிகழ்ச்சியின் நிறைவாக பல்வேறு மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்களும் தாங்கள் பொறுப்பு வகித்து வந்த அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டனர்.

கூட்டத்திற்கு வந்திருந்த மூதாட்டிகள், மேடைக்கு வந்து தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இது கூட்டத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது‌.

சாத்தூரில் தவெக நிகழ்ச்சி

இதுகுறித்து, த.வெ.க.கட்சியினரிடம் கேட்டோம். அப்போது பேசியவர்கள், "தமிழக மக்கள் மாற்று அரசியலை எதிர்பார்க்கிறார்கள்.‌ திராவிட இயக்கங்கள் ஆட்சியில் மக்களுக்கு எந்த விடிவும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில், மக்களுக்கான‌ நல்லாட்சியை மக்களுள் ஒருவனாக இருந்து தந்திட த.வெ.க.தலைவர் விஜய், அரசியலில் கால்பதித்துள்ளார். அவர் மீது நம்பிக்கைக்கொண்டு பல லட்சக்கணக்கான பேர் த.வெ.க.வில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து வருகின்றனர்.

அந்தவகையில், சாத்தூர் அருகிலுள்ள வன்னிமடை கிராமத்தில் இருந்து கூட்டத்திற்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாய் இணைந்தனர். பாட்டியானாலும், மாற்று அரசியலுக்கான நபராக த.வெ.க.தலைவர் விஜய் வரவேண்டும் என்று அவர் மீது நம்பிக்கை வைத்து கட்சியில் இணைந்திருக்கும் பாட்டிமார்களை நாங்கள் மனதார வரவேற்கிறோம்" என்றனர்.

Aadhav Arjuna: விஜய்யின் தவெக -வில் இணைகிறாரா? - ஆதவ் அர்ஜுனா அளித்த பதில்

கடந்த வாரம், ஒழுங்கு நடவடிக்கைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது விசிக.இந்த நிலையில் நேற்று, கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்திருந்தா... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் மூட்டுவலி வருமா?

Doctor Vikatan: என்னுடைய தோழி எடைக்குறைப்புக்காகஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தார். அதன் காரணமாக அவருக்கு மூட்டுவலிவந்துவிட்டது. மருத்துவர் ஸ்கிப்பிங்கைதவிர்க்கச் சொல்லிவிட்டதாகச்சொல்கிறார். ஸ்கிப்பிங்... மேலும் பார்க்க

``திமுகவுடன் கூட இணைந்து செயல்பட்டிருக்க முடியும்; ஆனால்..." - திருமாவிடம் ஆதவ் சொன்னது என்ன?!

கடந்த வாரம், ஒழுங்கு நடவடிக்கைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது விசிக.இந்த நிலையில் நேற்று, கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். இத... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்கு பதிலாக டிப்ரெஷனை குறைக்கும் மாத்திரைகள் எடுப்பது சரியா?

Doctor Vikatan:தூக்க மாத்திரைகளுக்குப் பதிலாக தற்போது சில மருத்துவர்கள் ஆன்டி-டிப்ரெசன்ட் (anti-depressant) மாத்திரைகள் கொடுக்கிறார்கள்... அவை நல்லையா? தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா?பதில் சொல்கிறார், ... மேலும் பார்க்க

Rahul Gandhi: ``துரோணர் ஏகலைவரின் கட்டை விரலை வெட்டியதுப்போல...'' - பாஜகவை சாடிய ராகுல் காந்தி

தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர் காலக் கூட்டத்தொடரில் 75 ஆண்டுக்கால இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "எனது... மேலும் பார்க்க

கனமழை ஆய்வு: ``முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்!" -ஆவேசமான மக்கள்; பாதியில் கிளம்பிய அமைச்சர்!

கடந்த இரண்டு நாள்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாய் மாறியிருக்கின்றன. இதைத்தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பேரிடர் மீட்பு படையினர் ம... மேலும் பார்க்க