செய்திகள் :

Tvk Vijay: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்; நிவாரண உதவி வழங்கிய விஜய்

post image
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கியிருக்கிறார்.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நவம்பர் 30 ஆம் தேதி கரையைக் கடந்தது. இந்த புயலால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின.

திருவண்ணாமலை நிலச்சரிவு

குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ. 2000 கோடி நிவாரணம் வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கி இருக்கிறார். பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கியிருக்கிறார்.

Tvk Vijay

250க்கும் மேற்பட்டோரை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய், அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Farmers Protest: `விவசாயிகள் பொறுமையை சோதிக்க முயன்றால்...' - மத்திய அரசை எச்சரிக்கும் துணை ஜனாதிபதி

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.விவசாய விளைபொருள்களுக்கான குறைந்த... மேலும் பார்க்க

`சிறுபான்மையினர் நிலை குறித்து கவலை தெரிவித்தேன்; ஆனால் மோடி..'- ஏஞ்சலா மெர்க்கல் எழுதியிருப்பதென்ன?

ஜெர்மனியின் முதல் பெண் அதிபரும், ஜெர்மன் வரலாற்றில் நீண்ட காலம் பதவி வகித்த இரண்டாவது அதிபர் என்ற பெருமைக்கும் உரியவர் ஏஞ்சலா மெர்க்கல். இவர் எழுதியுள்ள சுயசரிதையில், இந்தியாவில் சிறுபான்மையினர் மீது ... மேலும் பார்க்க

`எனக்கு சரியாக இந்தி தெரியாது; தமிழ்நாட்டில் இது பெரிய பிரச்னை’ - நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அந்தக் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி சட்ட திருத்த மசோதா பற்றி இந்தியில் பேசும்போது, 'இந்தி தெரியாமல் இந்தியில் தவறாக பே... மேலும் பார்க்க

கார் மீது விழுந்த கான்கிரீட் - திறப்பதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய கோவை அவிநாசி சாலை மேம்பாலம்!

கோவை மாவட்டத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு கட்டி திறக்கப்பட்ட காந்திபுரம், திருச்சி சாலை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேம்பாலங்கள் முறையாக கட்டப்படவில்லை என்ற புகார் ... மேலும் பார்க்க

`6 மாதமாவது முதல்வராக இருக்க அனுமதியுங்கள்..!' - அமித் ஷாவிடம் கடைசி நேரம் வரை போராடிய ஷிண்டே

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு வார இழுபறிக்கு பிறகு நாளை புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியில் வந்த உடன் துணை முதல... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: சம்மதம் தெரிவித்த ஷிண்டே; இன்று புதிய முதல்வரைத் தேர்வும் செய்யும் மஹாயுதி கூட்டணி!

மகாராஷ்டிராவில் நாளை புதிய அரசு பதவியேற்கிறது. தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் தேதியே வந்துவிட்டபோதிலும், அமைச்சரவை பதவியேற்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள... மேலும் பார்க்க