செய்திகள் :

Union Budget 2025: ``நாங்கள் சொல்லும்போது நம்பாதவர்கள் இப்போது?" - விமர்சிக்கும் பா.சிதம்பரம்

post image
2025 - 2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து 8-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரமும் பட்ஜெட் தொடர்பாக தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

அவர், `` இது தேர்தலுக்கு முந்தைய பிரசாரத்தைப் போன்றது. 2025-2026 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட் நடுத்தர வர்க்கம் மற்றும் பீகார் வாக்காளர்களை குறிவைத்ததாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் இருந்து எடுக்க வேண்டிய செய்தி என்னவென்றால், பா.ஜ.க வரி செலுத்தும் நடுத்தர வர்க்கம் மற்றும் பீகார் வாக்காளர்களை மயக்க முயற்சிக்கிறது. இந்த அறிவிப்புகள் 3.2 கோடி வரி செலுத்தும் நடுத்தர வர்க்கம் மற்றும் பீகாரின் 7.65 கோடி வாக்காளர்களால் வரவேற்கப்படும். மீதமுள்ள இந்தியாவுக்கு நிதியமைச்சரிடம் ஆறுதலான வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை, இதற்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பிரதமரின் தலைமையில் கைதட்டலும் கொடுக்கின்றனர்.

பா. சிதம்பரம்

அரசு நிதிப் பற்றாக்குறையை 4.9% -லிருந்து 4.8% ஆக மேம்படுத்தியதாக கூறுகிறது, ஆனால் இது பொருளாதாரத்திற்கு பெரும் விலையை கொடுத்தே அடையப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விஷயங்களே இந்த பட்ஜெட்டிலும் இருக்கிறது. கடந்த ஆண்டைவிட திட்டங்களுக்கு இந்தாண்டு குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என மத்திய அரசு கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறியிருக்கிறது. பொருளாதாரம் மந்தமடைந்து வருகிறது , அரசின் திட்டமிடும் மற்றும் செயல்படுத்தும் திறன் குறைந்துவிட்டது என்று நாங்கள் கூறியபோது எங்களை நம்பாதவர்கள், இப்போது எங்களை நம்புவார்கள் என்று நம்புகிறேன்.'' எனக் கூறியிருக்கிறார் பா.சிதம்பரம்.

Union Budget 2025 : பட்ஜெட்டில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய `10' விஷயங்கள் - Quick read

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப் 1) தாக்கல் செய்திருக்கிறார்.இது நிர்மலா சீதாராமன்தாக்கல் செய்யும் 8-வது மத்திய பட்ஜெட்டாகும். இளைஞர்கள் ம... மேலும் பார்க்க

Union Budget 2025 : ``1 கோடி மக்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை!'' - நிர்மலா சீதாராமன்

பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 2025- 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீ... மேலும் பார்க்க

நிர்மலா சீதாராமன் : மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழர்கள் குறித்து தெரியுமா?

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவை அடுத்து நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் நிர்மலா சீதாராமன்.இவர் 2025க்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இது அவரது 8-வது பட்ஜெட்டாகும்.Nirmala Si... மேலும் பார்க்க

Budget 2025 Live : இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர்... பிப்ரவரி 1-ல் தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்!

தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்!நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்... மேலும் பார்க்க

Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முதல் பட்ஜெட் தெரியுமா?

இந்தியாவில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார். யார... மேலும் பார்க்க