செய்திகள் :

Unnatural Sex: `மனைவியுடன் ஒப்புதலற்ற இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமல்ல' - நீதிமன்றம் சொல்வதென்ன?

post image

சத்தீஸ்கர் மாநிலத்தில், இயற்கைக்கு மாறான உடலுறவால் பெரிட்டோனிடிஸ், மலக்குடலில் துளை போன்ற நோயால் பாதிக்கப்பட்டப் பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு, 'இயற்கைக்கு மாறான உடலுறவால் ஏற்பட்ட பாதிப்பால்தான் அவர் உயிரிழந்தார்' எனக் குறிப்பிட்ட விசாரணை நீதிமன்றம், உயிரிழந்த பெண்ணின் கணவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

பாலியல் தொல்லை

இந்த தீர்ப்பை எதிர்த்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏற்கெனவே, இந்தியாவில் திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்கொடுமை, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமல்ல என நீதிமன்றத் தீர்ப்பிருக்கும் நிலையில், திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்கொடுமையும் குற்றமே என உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு, ``திருமணம் என்ற கட்டமைப்பை பாதுகாப்பது அவசியம். எனவே, திருமணத்துக்குப் பிறகான பாலியல் வன்கொடுமையை குற்றமாக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், இந்த விவகாரம் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் இல்லை" எனக் கருதுகிறது.

அதனால் இயற்கைக்கு மாறான உடலுறவு குறித்த இந்த வழக்கு கவனம் பெற்றது. இந்த வழக்கை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், ``இயற்கைக்கு மாறான உடலுறவு கொலைக்கு சமமானதல்ல. மனைவி 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், எந்த உடலுறவையும், எந்த சூழ்நிலையிலும் கணவரின் பாலியல் தொல்லை எனக் கூற முடியாது. எனவே, இயற்கைக்கு மாறான உறவுக்கு மனைவியின் ஒப்புதல் இல்லாதது முக்கியத்துவத்தை இழக்கிறது. அதனால், இயற்கைக்கு மாறான உடலுறவு தண்டனையின் வரம்பிலிருந்து விலக்கப்படுகிறது." எனக் குறிப்பிட்டு, குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்திருக்கிறது.

கலாஷேத்ரா பாலியல் புகார்: "விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் தொடங்க வேண்டும் எனச் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட... மேலும் பார்க்க

RN Ravi: `ஒரே கேள்வியை தான் இரண்டு நாள்களாக உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!’ - உச்ச நீதிமன்றம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது.மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ப... மேலும் பார்க்க

ஜெயலலிதா: ``என் அத்தையின் நகைகளை என்னிடமே கொடுக்க வேண்டும்..!" - உச்ச நீதிமன்றத்தில் ஜெ. தீபா

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்றார் முன்னாள் முதல்வர் ... மேலும் பார்க்க

`ஆளுநர் அதிகாரங்களை குறை மதிப்பிட்டு இருக்கிறார்கள்' - இறுதிக்கட்டத்தில் வழக்கு; இன்று நடந்தது என்ன?

இன்றும் தொடர்ந்த வழக்கு விசாரணை..!தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழ்நாடு அரசு உரிய உத்தரவுகளை பெற்று வருகிறது. தமிழ்நாடு ஆளுநரும் உச்ச நீதிமன்... மேலும் பார்க்க

"நான் அளித்த 1 லட்ச தீர்ப்புகளும் முருகன் கூறியதுதான்..." - சர்ச்சையைக் கிளப்பிய முன்னாள் நீதிபதி

காரைக்குடி நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சொக்கலிங்கம், தான் 28 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றி, ஒரு லட்சம் ... மேலும் பார்க்க

RN Ravi: `யார் அறிவுரையின்படி ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்?’ - உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு..! தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இன்றைய வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிப... மேலும் பார்க்க