செய்திகள் :

UPSC Exam: ஒரே வீட்டில் ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள்.. சென்னையில் அக்கா, தங்கை சாதனை!

post image

கவிஞர்கள் மு.முருகேஷ் - அ.வெண்ணிலா தம்பதியினரின் இரு மகள்கள் ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் ஆக தேர்வாகி உள்ளனர்.

திருவண்ணாமலை, வந்தவாசியைச் சேர்ந்த மு.முருகேஷ் - அ.வெண்ணிலா தம்பதியினர் சென்னையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்தவர் மு.வெ.கவின்மொழி. அடுத்தது இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி.

இவர்கள் மூவருமே 11, 12-ஆம் வகுப்பு வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில் படித்து, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.

இளங்கலையில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த இவர்கள் யு.பி.எஸ்.சி தேர்வுக்காக சென்னையில் உள்ள தனியார் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்திலும் இணைந்து பயிற்சியைத் தொடர்ந்தனர்.

கவிஞர்கள் மு.முருகேஷ் - அ.வெண்ணிலா குடும்பம்
கவிஞர்கள் மு.முருகேஷ் - அ.வெண்ணிலா குடும்பம்

இதற்கிடையில், மு.வெ.கவின்மொழி, டி.என்.பி.எஸ்சி குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, குன்றத்தூர் ஆணையராகப் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், கவின்மொழி, நிலாபாரதி இருவரும் 2024-ஆம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்று, நேர்காணலுக்குச் சென்றிருந்தனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி வெளியானது. இதில் கவின்மொழி, அகில இந்திய அளவில் 546- ஆவது ரேங்கில் தேர்வாகி, ஐபிஎஸ் அதிகாரிக்கான பயிற்சியினைப் பெற உள்ளார்.

நேற்று, யு.பி.எஸ்.சி வனப்பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், நிலாபாரதி, அகில இந்திய அளவில் 24-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார். ஒரே வீட்டில் அக்கா ஐபிஎஸ் அதிகாரியாகவும், தங்கை ஐஎஃப்எஸ் அதிகாரியாகத் தேர்வானதைப் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

வாழ்த்துகள் அக்கா, தங்கை!

சக்கர நாற்காலியே கால்கள்; உலகம் முழுவதும் மாணவர்கள்... சுழலும் ஓவியர் சக்திராணி!

கொரோனா காலகட்டத்தில் தன்னியல்பில் சுழலும் உலகம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயங்கி நின்ற நிலையில், சக்கர நாற்காலியில் சுழன்றவாறு உலகமனைத்திலும் உள்ள வளரிளம் பருவ வரைகலை ஆர்வலர்களுக்கு வரைகலையின் நுணுக... மேலும் பார்க்க

Spain Portugal Power Outage: திடீர் மின்வெட்டால் ஸ்தம்பித்த ஐரோப்பிய நாடுகள்; அரசுகள் சொல்வது என்ன?

விமானம் கிளம்ப முடியாமல் தடுமாறுகிறது... மருத்துவமனையில் நோயாளிகள் தவிக்கின்றனர்... எலெக்ட்ரிக் ரயில்கள் ஒரு அடி கூட நகராமல் திணறுகின்றன...இது கடந்த திங்கட்கிழமை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் நடந்துக... மேலும் பார்க்க

``நீதித்துறை சரியாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்னை இருக்காது..'' - விகடன் டாப் 10 மனிதர் லோகநாதன்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை (ஏப்ரல் 26), ஆனந்த விகடனின் `நம்பிக்கை விருதுகள்' நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், அதிகார அத்துமீறல்களை, முறைகேடுகளை, கேள்விக்குள்ளாக்கி அம்பலப்படுத்தும... மேலும் பார்க்க

Nambikkai Awards: 'ரயிலில் சீட்கூட தரமாட்டார்கள்; இன்று அதிகாரி’ - தடையுடைத்த திருநங்கை சிந்து கணபதி

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்' விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.தனது 23 வயதில... மேலும் பார்க்க

இஸ்ரோ முன்னாள் தலைவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் காலமானார்!

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் இன்று உடல்நல குறைவால் பெங்களூரில் காலமானார். கஸ்தூரி ரங்கன் 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோ தலைவராக பதவி வகித்தவர். இவர் மாநிலங்களவை உறுப்பினர... மேலும் பார்க்க