"என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்ப...
Vaibhav Taneja: சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளாவின் வருமானத்தை தாண்டிய `வைபவ் தனேஜா' - யார் இவர்?
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளாவை விட, கடந்த ஆண்டு அதிக வருமானம் பெற்றுள்ளார். டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரி வைபவ் தனேஜா. இவரும் ஒரு இந்தியர்.
யார் இவர்?
இந்தியாவிவைச் சேர்ந்தவர் வைபவ் தனேஜா. டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். 2000-ம் ஆண்டு பட்டயக் கணக்காளராக தேர்ச்சி பெற்ற இவர், 2006-ம் ஆண்டு சான்றளிக்கப்பட்ட பொது கணக்காளராக ஆனார்.
2016-ம் ஆண்டு டெஸ்லாவில் காலடி எடுத்து வைத்த இவர், 2023-ம் ஆண்டு முதல், டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார்.

2024-ம் ஆண்டில்...
டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக இவரது சம்பளம் 4 லட்சம் டாலர்கள். ஆனால், இந்தப் பணி உயர்வுக்கு அவருக்கு கொடுத்த ஊக்கமாக கொடுக்கப்பட்ட பங்குகள் உள்ளிட்டவைகளால் இவரது வருமானம் 2024-ம் ஆண்டில் 139 மில்லியன் டாலர்கள் என்று 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' குறிப்பிட்டுள்ளது.

இவரது இந்த வருமானம் சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளாவை விட அதிகமாகும். 2014-ம் ஆண்டில், சுந்தர் பிச்சையின் வருமானம் 10.73 மில்லியன் டாலர்கள். சத்யா நாதெள்ளாவின் வருமானம் 79.106 மில்லியன் டாலர்கள்.
ஆக, வருமான விஷயத்தில் சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளாவை முந்தி உள்ளார் வைபவ் தனேஜா.