செய்திகள் :

Valentine's Day: `ஓநாயின் இரைகளுக்கு உங்கள் Ex-ன் பெயரை வைக்க வாய்ப்பு’ - ஏன் தெரியுமா?

post image

`உங்கள் முன்னாள் காதலியின் பெயரை ஓநாய்க்கு வீசப்படும் இரைகளுக்கு நீங்கள் வைப்பீர்களா?’... என்ன கேள்வி இது என்று தோன்றும். ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸில் இருக்கும் ஒரு காட்டுயிர் சரணாலயத்தில் இவ்வாறு செய்கின்றனர். இதற்கான காரணமும் பின்னணியும் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

காதலர் தினத்தன்று பொதுவாக காதலன், காதலி தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். விட்டுச் சென்ற அல்லது முடிந்து போன உறவை கொண்டாடவும் சில வித்தியாசமான வழிகள் உள்ளன.

அப்படி டெக்சாஸில் உள்ள சான் அன்டோனியோ மிருகக்காட்சிசாலைகள் சரணாலயங்கள் உங்களது முன்னாள் காதலர் அல்லது காதலின் பெயர் கொண்ட உணவுகளை ஓநாய்க்கு வீச அனுமதிக்கிறது. முறிந்து போன உறவுகளின் பெயரை கரப்பான் பூச்சி, எலி அல்லது ஓநாய்க்கு கொடுக்கப்படும் இரைக்கு வைத்து கொடுக்க அனுமதிக்கின்றன. 5 அமெரிக்க டாலர் செலுத்தி இவ்வாறு பெயர் வைத்து விலங்குகளுக்கு உணவு வழங்கலாம்.

நிதி திரட்டும் முயற்சியாக இதனை செய்து வருவதாக காட்டுயிர் சரணாலயத்தின் இணை உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் காதலர் என வரும்போது கோபத்தை வெளி காட்ட அளவே இருக்காது. எனவே அவர்களது பெயரை ஓநாய்களுக்கு தூக்கி எறியும் உணவிற்கு வைத்தால் அவற்றை தூக்கி எறியும்போது விலங்குகளுக்கும் வயிறு நிறையும், மனிதர்களுக்கும் அழுத்தத்தின்/வெறுப்பிம் தாக்கம் குறையும் என்று கூறுகின்றனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`ஒரு தலைவன்; 5 தலைவிகள்’ ; குட்டியை மறைக்கும், மாம்பிஞ்சுக்கு ஏங்கும்..! - இது மான்களின் வாழ்க்கை

மான்களை வேட்டையாட, புலியோ, சிறுத்தையோ, செந்நாய்களோ, நரிகளோ, கழுதைப்புலிகளோ தூரத்தில் வரும்போதே, மரங்களின் மீது உட்கார்ந்திருக்கிற மயில்கள் அகவல் செய்து மான்களை எச்சரித்து விடுமாம். மயில்கள் ஏன் மான்கள... மேலும் பார்க்க

பாம்பு ஏன் தனது தோலை உரிக்கிறது தெரியுமா? - ஆச்சர்யப் பின்னணி

பாம்பு தனது தோலை உரிக்கும் போது அவற்றைப் பார்த்தால் கொத்துமென்று கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையா? எதற்காக இவ்வாறு பாம்பு தன் தோலை உரித்துக் கொள்கின்றன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.மனிதர்களி... மேலும் பார்க்க

கோவை: 6 ஆண்டுகளுக்குப் பிறகு தடாகம் பகுதிக்கு வந்த சின்னத்தம்பி யானை!

கோவை தடாகம், ஆனைக்கட்டி, மருதமலை சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானை மக்களிடம் நன்கு பிரபலம். அதன் சேட்டைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதேநேர... மேலும் பார்க்க

காங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டி: ஈரோட்டில் பார்வையாளர்களை கவர்ந்த காளைகள்!

காங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்கான அழகுப் போட்டிகாங்கேயம் கால்நடைக்க... மேலும் பார்க்க

நாகர்கோவில்: குப்பைக் கிடங்கில் தீ... சாலையில் புகை; மூச்சுத்திணறி மக்கள் கடும் அவதி..| Photo Album

நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைக் கிடங்கில் தீ..நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைக் கிடங்கில் தீ.. மேலும் பார்க்க