செய்திகள் :

Vetrimaaran - Dhanush: மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - வெளியான தகவல்

post image
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மாதம் `விடுதலை பாகம் 2' திரைப்படம் வெளியாகியிருந்தது.

சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணால், கிஷோர் எனப் பல நட்சத்திரங்கள் நடித்திருந்த விடுதலை படத்தின் பாகம் 1 மற்றும் பாகம் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் 'ஆர். எஸ் இன்போடெயின்மென்ட்' நிறுவனமே தயாரித்திருந்தது.

வெற்றிமாறன், சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவலும் முன்பே வெளியாகியிருந்தது. கூடிய விரைவில் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்பதை தயாரிப்பாளர் தாணு சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார். `வாடிவாசல்' திரைப்படத்திற்காக சூர்யா, காளைகளை வாங்கி வளர்கிறாராம். அது மட்டுமல்ல படத்திற்கான சில ஆரம்பக்கட்ட வேலைகளும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.

Director Vetrimaaran, Dhanush

விடுதலை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'ஆர். எஸ் இன்போடெயின்மென்ட்' நிறுவனத்தில் மற்றொரு திரைப்படத்தையும் இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இத்திரைப்படம் வெற்றி மாறன் இயக்கும் 9-வது படம். பொல்லாதவன், ஆடுகளம் வடசென்னை அசுரன்' போன்ற திரைப்படங்களையும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை இணைகிறது இந்தக் கூட்டணி. பொல்லாதவன், ஆடுகளம் வடசென்னை அசுரன்' போன்ற திரைப்படங்களையும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை இணைகிறது இந்தக் கூட்டணி.

Jayam Ravi: `இனிமேல் யாரும் என்னை ஜெயம் ரவி என்று அழைக்க வேண்டாம்' - வெளியான திடீர் அறிக்கை

ஜெயம் ரவி என்று இனிமேல் தன்னை யாரும் அழைக்க வேண்டாம் ரவி மோகன் என அழைக்கவும் என நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிற்கும் அறிக்கையில், " அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவு... மேலும் பார்க்க

Soori: 'எனது வாழ்க்கையை மாற்றிய திரைப்படம் இது' - 'விடுதலை 2' வெற்றி குறித்து சூரி நெகிழ்ச்சி

'விடுதலை-1' வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில், இளையராஜா இசையில் உருவான 'விடுதலை- 2' டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் ... மேலும் பார்க்க

Ajithkumar: 'திராவிட மாடல் அரசின்...'- அஜித்தை வாழ்த்திய உதயநிதி

நடிகர் அஜித்துக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இதனை அஜித் ரசிகர... மேலும் பார்க்க

Ajithkumar: `Game Starts' - துபாய் ரேஸில் ஜெயித்த அஜித் -குவியும் வாழ்த்துகள்

துபாயில் நடந்து முடிந்திருக்கும் 24H ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி 922 போர்ஷே பிரிவில் 3ம் இடம் பிடித்திருக்கிறது.துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் அஜித் கலந்துக்கொண்டிருந்தார். கார் ரேஸ் தொடங்குவத... மேலும் பார்க்க