செய்திகள் :

Vetrimaaran: 'STR-49'ல் இரண்டு கெட்டப்களில் அசத்தும் சிலம்பரசன்; தொடங்கும் படப்பிடிப்பு அப்டேட்

post image

கடந்த இரண்டு நாட்களாக வெற்றிமாறன் - தனுஷ் - சிலம்பரசனின் 'வட சென்னை' என்.ஓ.சி. விவகாரம்தான் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு வெற்றிமாறன் முடிவுக்கு வந்துவிட்டவே, மீண்டும் உற்சாகமாகியுள்ளது பட யூனிட். வெற்றிமாறனின் படத்தின் தற்போதைய நிலவரம் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

சிலம்பரசன்

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறனின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கிறார். அந்த படத்தின் புரோமோ ஷூட் ஒன்று விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு ஒன்று சமீபத்தில் சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் ஒன்றில் நடந்தது. இரண்டு நாட்கல் நடந்த அதன் படப்பிடிப்பில் சிலம்பரசன், இயக்குநர் நெல்சன் மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் என பலரும் பங்கேற்றனர். வட சென்னை பின்னணியில் உருவாகும் கதை இது. ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் என பலரும் நடிக்கின்றனர். படத்தின் நாயகிகள் பரிசீலனையில் உள்ளனர்.

வெற்றிமாறன், சிலம்பரசனிடம இந்தக் கதையைச் சொல்லும்போது, ஆரம்பத்தில் அவருக்கு ஒரு கெட்டப் தான் இருந்ததிருக்கிறது. சிலம்பரசனின் இன்வால்வ்மென்ட் பார்த்து ஆச்சரியமான இயக்குநர் வெற்றி மாறன் அவரை டபுள் கெட்டபுகளில் நடிக்க வைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்கிரிப்டையும் இன்னும் ஸ்பெஷலாக செதுக்கியுள்ளார் வெற்றிமாறன். படத்தில் சிலம்பரசன் இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார் என்றும் அதில் ஒரு தோற்றம் இளவயது சிலம்பரசன் என்கிறார்கள். படத்தின் புரோமோ வீடியோவில் சிலம்பரசனின் இரண்டு லுக்குகளும் வெளிவரலாம் என்ற பேச்சு இருக்கிறது.

Nelson | நெல்சன்

வெற்றிமாறன் - சிலம்பரசனின் படத்திற்கான சென்னை வளசரவாக்கம் பகுதியில் பிரமாண்டமான வடசென்னை பகுதியை செட் போட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் அங்கே புரோமோ வீடியோவின் அடுத்த ஷெட்யூல் அங்கே படமாக்க உள்ளனர். அதிலும் இயக்குநர் நெல்சன் நடிக்கிறார். சிலம்பரசன் தனது தோற்றத்திற்காக பல கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். ஆக, 'எஸ்.டி.ஆர் 49' படத்தின் புரோமோ வீடியோ, இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Killer: 'உங்கள் அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ!' - இயக்குநராக நெகிழும் எஸ்.ஜே.சூர்யா

10 வருடங்களுக்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடிக்கவிருக்கும் திரைப்படம் 'கில்லர்'.இந்தப் படத்தில் 'அயோத்தி' பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக நடிக்கிறார். கடந்த வாரம் இந்த படம் தொடர்பான அதிகாரப்ப... மேலும் பார்க்க

"சின்னப் பையனா இருந்தவருக்கு கல்யாணமானு... வயச நம்பமாட்டேங்குறாங்க" - பகிர்கிறார் `பசங்க’ ஶ்ரீராம்

'பசங்க' திரைப்படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரங்களை என்றும் மறக்க முடியாது. சிறுவயதிலேயே அவரவரின் கதாபாத்திரங்களுக்கு முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தனர். அவர்களுள் ஜீவா என்ற கதாபாத்திரத்தில... மேலும் பார்க்க

Dragon 100: ``நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' - இயக்குநர் மிஷ்கின்

அஸ்வத் மாரிமுத்து - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'டிராகன்'. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். 'டிராகன... மேலும் பார்க்க