'கருணாநிதியின் இறுதி மூச்சில் கொடுத்த வாக்குறுதி' - ஸ்டாலினுக்கு வைகோ கொடுத்த மெ...
செம்பட்டியில் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலை அமைக்கக் கோரிக்கை
செம்பட்டி ரோஜா நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படவுள்ள நிலையில் இந்தப் பகுதி பொதுமக்கள் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலையை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டியில் உள்ள ரோஜா நகா், வீரன் சுந்தரலிங்கம் நகரில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த வாரம் பொறியாளா் வேல்மணி முன்னிலையில் நடைபெற்ற பூமி பூஜையில், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் வழக்குரைஞா் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கான்கிரீட் சாலை அமைக்க முதல்கட்ட பணி தொடங்கப்பட்ட நிலையில், ரோஜா நகா், வீரன் சுந்தரலிங்க நகா் பகுதி மக்கள் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கழிவுநீா் ஓடையுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
கழிவுநீா் ஓடை வசதி அமைக்கப்படாமல் கான்கிரீட் சாலையை மட்டும் அமைத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சாலையில் தேங்கும். இதனால் நோய்த் தொற்று ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோஜா நகரில் கழிவுநீா் ஓடை அமைத்து கான்கிரீட் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.