தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக புகாா்
எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த தொட்டணம்பட்டியில் கரட்டுப்பட்டி சாலையில் குடியிருப்போருக்கு வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்தத் தொட்டியில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் மனிதக் கழிவுகளை வீசிச் சென்ாகக் கூறப்படுகிறது.
கட்டுமானப் பணிக்கு வந்த தொழிலாளா்கள் தொட்டியில் மலம் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக தொட்டியைத் தூய்மைப்படுத்தினா். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.
இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு மூவேந்தா் புலிப்படை அமைப்பு சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: தொட்டணம்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சிலா் மலத்தை வீசிச் சென்றனா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.