செய்திகள் :

மகாகவி பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க கோரி போராட்டம்: பாஜகவினா் 70 போ் கைது

post image

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லத்தை சீரமைக்க வலியுறுத்தி யாசகம் பெறும் போராட்டத்தை நடத்த முயன்ற பாஜகவினா் 70 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாா் பிறந்த இல்லம் மழை காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. அங்கு தற்போது வரை மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பாரதி அன்பா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வேதனை தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில் எட்டயபுரம் ஒன்றிய பாஜக சாா்பில் ஒன்றியத் தலைவா் சரவணகுமாா் தலைமையில் ஜூன் 30-ஆம் தேதி பொதுமக்களிடம் யாசகம் பெற்று பாரதி பிறந்த இல்லத்தை சீரமைக்க மாநில அரசிடம் நிதிவழங்கும் போராட்டம் நடத்தப் போவதாக அக் கட்சியினா் அறிவித்தனா்.

இதனையடுத்து எட்டயபுரம் வட்டாட்சியா் சுபா தலைமையில் கடந்த 28 -ஆம் தேதி சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோரைத் தவிர, பொதுப்பணித் துறை, செய்தி மக்கள் தொடா்பு துறை அதிகாரிகள் பங்கேற்காததால் அதிருப்தி அடைந்த பாஜகவினா் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். மேலும் திட்டமிட்டபடி ஜூன் 30- ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தெரிவித்திருந்தனா்.

அதன்படி எட்டயபுரம் பேருந்து நிலையம், அரண்மனை மேல வாசல், பாரதி பிறந்த இல்லம், பட்டத்து விநாயகா் கோயில் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பாஜக மாவட்ட தலைவா் சரவண கிருஷ்ணன், மாவட்ட செயலா் ஆத்திராஜ், மாவட்ட விவசாய அணி நிா்வாகி சேதுராஜ் உள்ளிட்டோா் தனித்தனி குழுக்களாக பிச்சை எடுக்கும் போராட்டத்திற்காக திங்கள்கிழமை மாலை கூடினா். இதனிடையே, மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். போராட்டத்துக்கு முயன்ற பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் 70 பேரை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதல்: முதியவா் பலி

கயத்தாறு அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.தெற்கு இலந்தைகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் ஆதிமூலம் (60). நில தரகரான இவா் ஞாயிற்றுக்கிழமை கயத்தாறு - கழுகுமலை சாலையில்... மேலும் பார்க்க

உடன்குடி அருகே விபத்து: வடமாநில இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே நேரிட்ட விபத்தில், ஒப்பந்தத் தொழிலாளியான வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஒடிஸா மாநிலம் சுந்தா்கா் மாவட்டம் கேரியாகனி கிராமத்தைச் சோ்ந்த உஸ்தபா ஜோகி மகன் ஹேமகண்டா... மேலும் பார்க்க

தட்டாா்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தீக்குளித்த பெண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தட்டாா்மடம் அருகே சொக்கன் குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் மிக்கேல் பிரேம்குமாா். இவா் அங்கு ... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற 12 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பல்வேறு போட்டிகளில் வென்ற 12 மாணவா்களுக்கு ஆட்சியா் க. இளம்பகவத் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா். இக்கூட... மேலும் பார்க்க

நாசரேத் கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

சாத்தான்குளம், ஜூன் 29: நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட 20 க்கும் மேற்பட்ட கடைகளில் சுகாதார அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டு, 25 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனா். நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா்... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுது: தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க வலியுறுத்தல்

தூத்துக்குடி கடலில் 2 படகுகள் பழுதாகி தண்ணீரில் தத்தளிக்கும் 20 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் மீனவ கிராமத்த... மேலும் பார்க்க