Gaza மக்களை வெளியேற்ற விடமாட்டோம் - Trumpக்கு எதிராக திரண்ட Arab States | Decode
YouTuber: ``குடும்ப உறவை சீரழிக்கும் ஆபாச பேச்சு'' -பிரபல யூடியூபர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு
YouTuber: சோசியல் மீடியா பிரபலங்களான ரன்வீர் அல்லாபாடியா மற்றும் அபூர்வா மகிஜா, காமெடியன் சமய் ரைனா ஆகியோர் இணைந்து யூடியூப்பில் ‘India’s Got Latent'என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட ரன்வீர் போட்டியாளர் ஒருவரிடம், "உங்கள் வாழ்நாள் முழுக்க பெற்றோர் ஒவ்வொரு நாளும் உடலுறவு கொள்வதை பார்ப்பீர்களா அல்லது அதை பார்ப்பதை நிறுத்த ஒரு முறை அவர்களுடன் அதில் பங்கேற்பீர்களா" என்று கேட்டு சர்ச்சையை கிளப்பி இருந்தார். இக்கருத்துக்கு நாடு முழுவதும் சர்ச்சையும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ரன்வீர் அல்லாபாடியா, அபூர்வா மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பினர். சிவசேனா எம்.பி.க்கள் பிரியங்கா சதுர்வேதி, நரேஷ் மஸ்கே ஆகியோர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/iyo1ke0h/apoorvamukhija17393393760691739339383931.avif)
அஸ்ஸாம் போலீஸாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். தேசிய பெண்கள் கமிஷன், ரன்வீர் உள்பட இந்த ஷோவில் பங்கேற்றவர்களுக்கு சம்மன் அனுப்பியது. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இந்நிகழ்ச்சி குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார். மும்பையில் இன்று அபூர்வா கார்ரோடு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
இந்நிலையில், இன்று சன்மதி பாண்டே என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் இந்நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். சன்மதி பாண்டே தனது புகாரில், திருமணம் என்பது ஒரு மத சடங்கு. அதனை அவமதிக்கும் விதமாக ரன்வீர் பேசியுள்ளார்.
அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபூர்வா மகிஜா, அருணாச்சல பிரதேச உணவு முறை குறித்து பேசியிருப்பது வடகிழக்கு மாநில அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அருணாச்சல பிரதேச மக்கள் நாய்களை சாப்பிடுவதாக குறிப்பிட்டுள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
யூடியூப்பர் ஆசிஷ் என்பவரையும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மும்பை போலீஸார் ரன்வீர், அபூர்வா மற்றும் காமெடியன் சமய் ரைனா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில் இந்திய கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவை சீரழிக்கும் விதமாக பேசியதாக போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.