"வட இந்திய கட்சி என கிண்டலடிக்கிறார்கள்; தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க போகிறோம்!" -...
ஃபெடரல் வட்டி விகிதத்தை 3 சதவீத புள்ளிகள் குறைக்க வேண்டும் - டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை கணிசமாகக் குறைக்க வலியுறுத்தியுள்ளார்.
ஃபெடரல் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை 3 சதவீத புள்ளிகள் குறைக்க வேண்டும். அமெரிக்காவின் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக கருதி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “அமெரிக்கவின் ஃபெடரல் விகிதம் இப்போதைய நிலவரத்தின்படி, குறைந்தபட்சம் 3 புள்ளிகள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு ஓராண்டில் ஒரு புள்ளிக்கு 360 பில்லியன் டாலர்கள் செலவினம் ஏற்படுகிறது. விலைவாசி உயர்வு இருக்கக்கூடாது. இப்போது அமெரிக்காவுக்கு நிறைய நிரிவனங்கள் முதலீடுகள் குவிகின்றன. இதனைக்கருதி, வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், அமெரிக்க வரலாற்றில் பெடரல் வட்டி விகிதம் 300க்கும் மேல் அடிப்படை புள்ளிகள் குறைக்கப்படவிருப்பது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2020-ஆம் ஆண்டில் மார்ச் மாதம் பெடரல் வட்டி விகிதம் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.