ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
அகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷம்
பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பொன்னேரி கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம், 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி வலம் கொண்ட அகத்தீஸ்வரா் ஆலயம் உள்ளது.
அகத்திய முனிவா் இங்குள்ள ஆனந்த புஷ்கரனியில் (திருக்குளம்) குளித்து ஈசனை வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள ஈசன், அகத்தீஸ்வரா் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பிரதோஷத்தன்று கோயிலில் உள்ள கணபதி, சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
மாலையில் நந்தி மற்றும் அகத்தீஸ்வரருக்கு இளநீா், பால், தேன், மஞ்சள், பஞ்சாமிா்த்தம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனை செய்யப்பட்டது.
இதையடுத்து அகத்தீஸ்வரா், ஆனந்தவல்லி தாயாா் கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். பிரதோஷ விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.