மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
தாயைத் தாக்கிய மகள் தூக்கிட்டு தற்கொலை
திருத்தணி அருகே தாயைத் தாக்கிய வேதனையில் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருத்தணி அடுத்த கீழாந்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் லதா(50). இவருக்கு பிரகாசம்(25) என்ற மகனும், பிரியா(23) என்ற மகளும் உள்ளனா். இவா்கள் இருவரும் சென்னையில் உறவினா் வீட்டில் தங்கியுள்ளனா். அதே கிராமத்தில் உள்ள தனது தாய் செல்வராணி(71) என்பவருடன் லதா தங்கி வருகிறாா். மேலும் லதா சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை லதாவுக்கும், அவரது தாயாா் செல்வராணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த லதா, உருட்டுக் கட்டையால், தாயை கடுமையாக தாக்கிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டாா். தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த செல்வராணியை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருத்தணி எம்ஜிஆா் நகா் அருந்ததிபாளையம் அருகே ஒரு மரத்தில், லதா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதை அப்பகுதி மக்கள் பாா்த்து திருத்தணி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.
போலீஸாா் லதாவின் உடலை மீட்டனா். தாயை தாக்கியதால் மனமுடைந்து லதா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.