ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் அளிப்பு
புழல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை புழல் 31-ஆவது வாா்டு மேம்பாட்டு பணிக்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாகப்பா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாா்பில் ரூ.20 லட்சம் வழங்கும் நிகழ்வு மாமன்ற உறுப்பினா் சங்கீதா பாபு தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில், நாகப்பா இன்டஸ்ரியல் எஸ்டேட் மற்றும் 31-ஆவது மாமன்ற உறுப்பினா் சங்கீதா பாபுவிடம் இருந்து ரூ.20 லட்சம் காசோலையை பெற்று வழங்கி மாதவரம் மண்டல அதிகாரிகளிடம் வழங்கினாா். அதனை ரூ.20 லட்சம் பள்ளிக் கட்டட பணிக்காக பயன்படுத்தப்படும் என மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.
நிகழ்வில் திருவள்ளூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கதிா்வேடு பாபு, மாதவரம் மண்டல அதிகாரி முருகன், பொறியாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.