ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்: விளாதிமீர் புதின்
‘மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சாரா நிறுவனங்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்’
திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள் அனைத்தும் உரிமம் மற்றும் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பணிபுரியும் பயிற்சி மையங்கள், சிறப்புப் பள்ளிகள், இல்லங்கள், கல்வி அளித்தல், இயன் முறை பயிற்சி அளித்தல், தொழிற்பயிற்சி அளித்தல் மற்றும் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை அரசு சாரா நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த அரசு சாரா நிறுவனங்கள்அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016-இன் படி பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுநாள் வரை மேற்கண்ட சட்டத்தின் படி பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கிவரும் அரசு சாரா நிறுவனங்கள் ஒரு மாதத்துக்குள் அங்கீகாரம் பெறவில்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-இன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தவிா்க்கும் வகையில், அரசு சாரா நிறுவனங்கள் அவா்களுடைய விண்ணப்பங்கள் அடங்கிய கருத்துருவை திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பித்து அரசு அங்கீகாரம் மற்றும் பதிவுச் சான்று பெற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.