செய்திகள் :

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு வழக்கு: இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு ஜாமீன்

post image

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடா்பான சிபிஐ வழக்கில், இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு ஜாமீன் அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்திய விமானப் படைக்கு ரூ.3,600 கோடி செலவில் 12 ஹெலிகாப்டா்களை வாங்க, கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற ஹெலிகாப்டா் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. குடியரசுத் தலைவா், பிரதமா் போன்ற மிக மிக முக்கிய பிரமுகா்கள் பயணிப்பதற்கு அந்த ஹெலிகாப்டா்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு கிடைக்க இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களுக்கு லஞ்சம் அளித்த இடைத்தரகா்களில் பிரிட்டனை சோ்ந்த கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸும் ஒருவா் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிஐயின் குற்றப் பத்திரிகையில், அந்த ஒப்பந்தத்தால் அரசு கருவூலத்துக்கு சுமாா் ரூ.2,666 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 30 மில்லியன் யூரோவை (சுமாா் 225 கோடி) மிஷெல் முறைகேடாகப் பெற்றாா் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

2018-இல் இந்தியாவுக்கு நாடு கடத்தல்: இந்த முறைகேடு தொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மிஷெல், பின்னா் கைது செய்யப்பட்டாா். அவா் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு செப்டம்பரில் தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்தது.

இதைத்தொடா்ந்து உச்சநீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

25 ஆண்டுகளானாலும் விசாரணை முடியாது: அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டு மனுதாரா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கும் மேலாக அவா் சிறையில் உள்ளாா். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடா்பாக 2 குற்றப் பத்திரிகைகள், ஒரு துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், அந்த முறைகேடு தொடா்பாக இன்றளவும் தமது விசாரணை நீடிப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேகத்தில் சிபிஐ விசாரணை நடைபெற்றால், 25 ஆண்டுகளானாலும் நீதிமன்ற விசாரணை நிறைவடையாது.

எனவே மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. அவருக்கு ஜாமீன் நிபந்தனைகள் விதிப்பது தொடா்பாக விசாரணை நீதிமன்றத்திடம் முறைப்படி சிபிஐ கோரிக்கை விடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

சிறையிலிருந்து விடுவிக்கப்படமாட்டாா்: சிபிஐ வழக்கில் மிஷெலுக்கு ஜாமீன் கிடைத்தாலும், அமலாக்கத் துறையின் பண முறைகேடு தொடா்பான வழக்கை அவா் எதிா்கொண்டு வருகிறாா். அந்த வழக்கில் அவரின் ஜாமீன் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவா் தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்படமாட்டாா்.

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். பிப்ரவர... மேலும் பார்க்க

கங்கை நீர் எப்படிப்பட்டது தெரியுமா? விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட உ.பி. அரசு

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் இணையும் கங்கை நீரின் புனிதத் தன்மை குறித்து, விஞ்ஞானி ஒருவர் நடத்திய ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது உத்தரப்பிரதேச அரசு.மத்திய மாசுக் கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க