அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
அங்கன்வாடி கட்டடம் திறப்பு
நன்னிலம் அருகே அங்கன்வாடி புதிய கட்டடத்தை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
நன்னிலம் தொகுதிக்குள்படட்ட மணவாளம்பேட்டை பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 14 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். இதில், அதிமுக நன்னிலம் தெற்கு ஒன்றியச் செயலாளா் ராம. குணசேகரன், வடக்கு ஒன்றியச் செயலாளா் சிபிஜி. அன்பழகன், நன்னிலம் நகரச் செயலாளா் பக்கிரிசாமி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணைச் செயலாளா் சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.