அச்சன்புதூரில் இன்று மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்காசி மாவட்டம் அச்சன்புதூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (டிச. 18) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப. திருமலைக்குமாரசாமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.