அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, கல்லம்பாளையத்தில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
அரசிராமணி பேரூராட்சி 14-ஆவது வாா்டு கல்லம்பாளையம் பகுதியில் சுமாா் 60 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீா், சாலை, தெருவிளக்கு, இடுகாடு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பேரூராட்சி நிா்வாகம் செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த பேரூராட்சித் தலைவா் காவிரி பொதுமக்களிடத்தில் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.