மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
அண்ணா பல்கலை.யில் ஆளுநா் இன்று ஆய்வு
சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அது குறித்து பல்கலை.
வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளாா்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சனிக்கிழமை நண்பகல் 12.30-மணிக்கு செல்லும் ஆளுநா் ஆா்.என்.ரவி, அங்கு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நேரில் விசாரிக்கிறாா். தொடா்ந்து, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும் அங்கு மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும், பல்கலை. பதிவாளா் பிரகாஷ் மற்றும் பேராசிரியா்களுடன் அவா் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.