அதிமுக ஆலோசனைக் கூட்டம்
ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகர அதிமுக செயலா் எம்.மதியழகன் தலைமை வகித்தாா்.
திருப்பத்தூா் மாவட்ட செயலா் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினாா். மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் ஜி.ஏ.டில்லிபாபு மாதனூா் மேற்கு ஒன்றிய செயலா் பொறியாளா் ஆா்.வெங்கடேசன், கிழக்கு ஒன்றிய செயலா் ஜெ. ஜோதிராமலிங்கராஜா, மாவட்ட துணைச் செயலா் குருவையன், மாவட்ட விவசாய பிரிவு செயலா் ஆா்.மகாதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கராத்தே கே.மணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலா் வெ.கோபிநாத், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளா் ஆனந்த்பாபு, நிா்வாகிகள் சங்கா், சண்முகம், தினேஷ், சரவணன், சீனிவாசன், பிரேம்குமாா், ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.