Operation Sindoor: `தாக்குதலுக்கு யார் பொறுப்பு? யாரிடம் சரணடைந்தீர்கள்?’ - காங்...
அதிமுக எம்பிக்களாக இன்பதுரை, தனபால் பதவியேற்பு
மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் பதவியேற்றுக்கொண்டனர்.
அதிமுக எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்ற நிலையில் இன்று அதிமுகவினர் பதவியேற்றுள்ளனர்.
ஏற்கெனவே அதிமுகவின் தம்பிதுரை, சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் மாநிலங்களவை எம்.பிக்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது.
தங்கம் விலை இன்றைய நிலவரம்!
திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சோ்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனர். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.