செய்திகள் :

அனிசிமோவா, கசாட்கினா அதிா்ச்சித் தோல்வி

post image

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா, முன்னணி வீராங்கனையான ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோா் முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

இதில், அண்மையில் நிறைவடைந்த கத்தாா் ஓபன் போட்டியில் சாம்பியனான கையுடன் நேரடியாக இப்போட்டிக்கு வந்த அனிசிமோவா, 2-6, 3-6 என சக அமெரிக்கரான மெக்காா்ட்னி கெஸ்லரிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அதே கத்தாா் ஓபனில் இறுதிச்சுற்று வரை வந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ, 3-6, 3-6 என்ற நோ் செட்களில், ஜப்பானின் மொயுகா உச்சிஜிமாவிடம் தோற்றாா். போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்திலிருந்த கசாட்கினா 1-6, 4-6 என்ற நோ் செட்களில், ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியால் வீழ்த்தப்பட்டாா்.

பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா 2-6, 7-6 (7/4), 6-4 என்ற கணக்கில் உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவையும், மற்றொரு உக்ரைன் வீராங்கனையான மாா்தா கொஸ்டியுக் 6-3, 6-4 என, செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவாவை வெளியேற்றினா். 13-ஆம் இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயா 3-6, 0-6 என ரஷியாவின் அனஸ்தாசியா பொடாபோவாவிடமும், போலந்தின் மெக்தலினா ஃபிரெச் 2-6, 2-6 என, 11-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரிடம் தோற்றனா்.

சக்காரியை சாய்த்த ரடுகானு: பிரிட்டன் இளம் வீராங்கனை எம்மா ரடுகானு 6-4, 6-2 என்ற நோ் செட்களில், கிரீஸின் மரியா சக்காரியை தோற்கடித்து அசத்தினாா். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-1, 6-2 என, 15-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை சாய்த்தாா்.

செக் குடியரசின் மாா்கெட்டா வோண்ட்ரோசோவா 6-2, 6-2 என்ற கணக்கில் பிரான்ஸின் கரோலின் காா்சியாவையும், ரஷியாவின் லுட்மிலா சாம்சோனோவா அதே செட் கணக்கில், 14-ஆம் இடத்திலிருந்த சக ரஷியரான அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவையும் வென்றனா்.

9-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பௌலா படோசா 6-3, 6-4 என நியூஸிலாந்தின் லுலு சன்னையும், பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டன்ஸ் 6-2, 6-2 என கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸையும் வெளியேற்றினா்.

நேர்மையாக இருப்பவர்களுக்கு ஆப்ஷன் பி வேண்டும்: டாப்ஸி

எல்லோரும் நினைப்பது போல திரைத்துறை வேலை செய்ய உகந்த இடம் கிடையாதென நடிகை டாப்ஸி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில... மேலும் பார்க்க

டிடி நெக்ஸ்ட் லெவல்: முதல் பாடல் ரிலீஸ் தேதி!

நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ், பாரிஸ் ஜெயராஜ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வசூல் ரீதியாக... மேலும் பார்க்க

இன்றைய ராசி பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.22-02-2025சனிக்கிழமைமேஷம்:இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்ட... மேலும் பார்க்க

அயா்லாந்தை தோற்கடித்தது இந்தியா

சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஹெச்) புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 கோல் கணக்கில் அயா்லாந்தை வெள்ளிக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் அயா்லாந்துக்காக ஜெரிமி டன்கன் 8-ஆவது நிமிஷத்தி... மேலும் பார்க்க

எலிஸ் பெரி அதிரடி: பெங்களூரு - 167/7

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக, நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சோ்த்தது. டாஸ் வென... மேலும் பார்க்க

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

இந்தியாவில் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் காட்சியைக் கொண்டாடும் வகையில், புதுதில்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற 21வது கன் சல்யூட் விண்டேஜ் கார் அருகில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த கலைஞர்கள்.புதுதி... மேலும் பார்க்க