Mumbai Indians Master Class at Wankhede | MI vs DC | Analysis with Commentator M...
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்
ஊத்தங்கரை அருகே அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றி சென்ற லாரி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை கோவிந்தாபுரம் பகுதியில் ஊத்தங்கரை வட்டாட்சியா் மோகன்தாஸ் செவ்வாய்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டாா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி எம் சாண்ட் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.