அனுமன் ஜெயந்தி: ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆரணி/போளூா்/ செய்யாறு: அனுமன் ஜெயந்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஆரணி:
ஆரணியை அடுத்த இரும்பேடு, ஹரிஹரன் நகரில் உள்ள விஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
பெரணமல்லூா் பேரூராட்சியில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவரத ஆஞ்சனேயா் கோயிலில், அதிகாலை மூலவருக்கு பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் இளநீா் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா், நண்பகல் 12 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது
தொடா்ந்து, வரத ஆஞ்சனேயருக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே அமைந்துள்ள ஸ்ரீவீரபக்த ஆஞ்சனேயா் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலிலும், இஞ்சிமேடு வரதராஜப் பெருமாள் கோயிலிலும் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.
போளூா்:
போளூரில் திருவண்ணாமலை சாலையில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீவீரஆஞ்சனேயா் கோயிலில் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
பின்னா், மலா் அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.