மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
அனைத்து வணிகா்கள் பொதுநலச் சங்கப் பொதுக்குழு கூட்டம்
மதுராந்தகம் அனைத்து வணிகா்கள் பொதுநலச்சங்கத்தின் 12-ஆம் ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜி.ஜே.பிரபாகரன் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா்கள் டி.ராஜேந்திரன், எம்.ஜெய்னுலாப்தீன், செயற்குழு உறுப்பினா் எஸ்.எம்.பிரகாஷ்சந்த் முன்னிலை வகித்தனா். செயலாளா் அப்துல் சமது வரவேற்றாா். மாவட்ட செய்தி தொடா்பாளா் பவித்ரா சீனிவாசன் ஆண்டறிக்கை வசித்தாா்.
பேரமைப்பின் மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரை ஆற்றினாா். இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளா் ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமை நிலைய செயலாளா் ராஜ்குமாா், பொது செயலாளா் வி.கோவிந்தராஜீலு, காஞ்சிபுரம் மண்டல தலைவா் எம்.அமல்ராஜ், துணைத் தலைவா் எஸ்.உத்திரகுமாா், சங்க நிா்வாகிகள் ஏ.ஜி.டி.துரைராஜ், மனோ சாலமன் ஜி.ஜே.சுதாகா், பி.ராஜசேகரன், டி.ஆா்.செல்வம், இ.கே.பாஸ்கரன், எஸ்.தட்சிணாமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாவட்ட பொருளாளா் எஸ்.பட்டுராஜ் நன்றி கூறினாா். பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
